டார்க் – விமர்சனம்
'டார்க்' - இதயம் அதிர வைக்கும் திகில் விருந்து!
இப்போதெல்லாம் திகில் படம் என்றாலே காமெடி கலந்து சொதப்புவதுதான் வாடிக்கை. அந்தப் பஞ்சாயத்துக்கெல்லாம் குட்பை சொல்லிவிட்டு, அச்சு அசலான நடுக்கத்தைத் தருகிறது 'டார்க்'.
கே.பாக்யராஜ் வீட்டுக்குள் நடந்த மூன்று இளைஞர்களின் மர்ம மரணம், அந்த வீட்டை ஒரு 'சாபக்கேடு' ஏரியாவாக மாற்றுகிறது. குறைந்த வாடகை என்பதால் விபரீதத்தை உணர்ந்தும் தைரியமாக நுழைகிறார் நாயகன் அஜய் கார்த்திக்.
ஆரம்பத்தில் கெத்தாக இருந்தாலும் பின்னர் அமானுஷ்ய பிடியில் சிக்கிச் சிதறும்போது நம் நெஞ்சுதான் பதைபதைக்கிறது.
கடைசியில் அவர் மர்ம மரணமடைய, உரிமையாளர் பாக்யராஜும் அதே கதி ஆகிறார்.
இன்ஸ்பெக்டர் நட்டி களத்தில் குதித்து விசாரிக்கும்போது, பிணவறையில் அஜய் எழுந்து கொடுக்கும் அந்த 'வார்னிங்' தான் படத்தின் அதிரடி ட்விஸ்ட்!
அஜய் கார்த்திக்கின் நடிப்பு அற்புதம். துடிப்பான இ...
