![]()
‘டார்க்’ – இதயம் அதிர வைக்கும் திகில் விருந்து!
இப்போதெல்லாம் திகில் படம் என்றாலே காமெடி கலந்து சொதப்புவதுதான் வாடிக்கை. அந்தப் பஞ்சாயத்துக்கெல்லாம் குட்பை சொல்லிவிட்டு, அச்சு அசலான நடுக்கத்தைத் தருகிறது ‘டார்க்’.
கே.பாக்யராஜ் வீட்டுக்குள் நடந்த மூன்று இளைஞர்களின் மர்ம மரணம், அந்த வீட்டை ஒரு ‘சாபக்கேடு’ ஏரியாவாக மாற்றுகிறது. குறைந்த வாடகை என்பதால் விபரீதத்தை உணர்ந்தும் தைரியமாக நுழைகிறார் நாயகன் அஜய் கார்த்திக்.
ஆரம்பத்தில் கெத்தாக இருந்தாலும் பின்னர் அமானுஷ்ய பிடியில் சிக்கிச் சிதறும்போது நம் நெஞ்சுதான் பதைபதைக்கிறது.
கடைசியில் அவர் மர்ம மரணமடைய, உரிமையாளர் பாக்யராஜும் அதே கதி ஆகிறார்.
இன்ஸ்பெக்டர் நட்டி களத்தில் குதித்து விசாரிக்கும்போது, பிணவறையில் அஜய் எழுந்து கொடுக்கும் அந்த ‘வார்னிங்’ தான் படத்தின் அதிரடி ட்விஸ்ட்!
அஜய் கார்த்திக்கின் நடிப்பு அற்புதம். துடிப்பான இளைஞனாக என்ட்ரி கொடுத்து, பிறகு பயத்தில் உறைந்து போகும் ஒவ்வொரு ரியாக்ஷனும் மிரட்டல்.
இன்ஸ்பெக்டர் நட்டி வழக்கமான துப்பறியும் பாணியைத் தாண்டி, அழுத்தமான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.
மூத்த கலைஞர் கே.பாக்யராஜ், தனது அனுபவ நடிப்பால் படத்திற்கு ஒரு கெத்தை ஏற்றி வைத்திருக்கிறார். மற்றவர்களும் தங்கள் பங்களிப்பைச் கச்சிதமாகத் தந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, இருட்டை வெறும் கருமையாக பார்க்காமல் அதற்குள் ஒரு பயங்கரமான மர்மத்தைச் செதுக்கியிருக்கிறார்.
லைட்டிங் விளையாட்டுகள் தியேட்டரில் தவிப்பை உண்டு பண்ணுகின்றன.
இசையமைப்பாளர் மனு ரமேஷ், அலறல் சத்தங்களை மட்டும் நம்பாமல், மெளனத்தின் மூலமே நம் இதயத்துடிப்பை எகிற வைத்திருக்கிறார்.
எடிட்டர் கதிரேஷ் அலகேஷன், அடுத்து என்ன நடக்கும் என்ற யூகத்தையே தவிடு பொடியாக்கிப் பதற்றத்தைத் தக்க வைக்கிறார்.
கலை இயக்குநர் சண்முகராஜாவின் செட்டிங்ஸ், அந்த வீட்டையே ஒரு பயங்கரமான கதாபாத்திரமாக மாற்றுகிறது.
இயக்குநர் கல்யாண் கே.ஜெகன், திகில் கதையை வெறும் பேய் கதையாகச் சுருக்காமல், சைக்கலாஜிக்கல் த்ரில்லராகக் கையாண்ட விதம் அருமை.
சில சின்ன லாஜிக் குறைகள் இருந்தாலும், பேயைக் காட்டாமலேயே பயத்தை உணர வைத்த அந்த மேக்கிங் ஸ்டைல் வேற லெவல்!
படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அந்தத் திகில் உணர்வு நம்முடன் பயணிக்கிறது.
நடுக்கத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்லும் இந்த ‘டார்க்’, தியேட்டரில் மிஸ் பண்ணக் கூடாத மிரட்டல் அனுபவம்!

