36 நிமிடங்கள் குறைக்கப்பட்டு நவம்பர்-28ல் ரீ ரிலீஸாகும் ‘அஞ்சான்’!
“11 வருடத்திற்கு முன்பு திட்டியதை விடவா இப்போது திட்டப் போகிறார்கள் ?” ; அஞ்சான் ரீ ரிலீஸ் குறித்து இயக்குநர் லிங்குசாமி!
தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி ஹீரோக்கள் பலர் சில வருடங்களுக்கு முன்பு நடித்த சூப்பர்ஹிட் படங்கள் சமீபகாலமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த 2014ல் என்.லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் 4k தொழில்நுட்பத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வரும் நவம்பர் 28ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அது மட்டுமல்ல இப்படம் தற்போது மறு படத்தொகுப்பு ( RE Edit ) செய்யப்பட்டு படத்தின் நீளம் கணிசமாக குறைக்கப்பட்டு வெளியாக இருக்கிறது.
சூர்யா, சமந்தா, வித்யுத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன்...



