டி என் ஏ _ விமர்சனம்
டி என் ஏ _ விமர்சனம்
நாயகன் அதர்வா காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் முழு நேர குடிகாரனாகி தன் குடும்பத்தாருக்கு பாரமாக இருக்கிறார்.
மற்றொருபுறம் மனவளர்ச்சியில் முதிர்ச்சியே இல்லாத பருவப் பெண்ணான நிமிஷா சஜயன் திருமணம் பலமுறை தள்ளிப் போகிறது.
விதியின் விளையாட்டோ என்னவோ இந்த இருவருக்கும் பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இரண்டு மைனஸ்கள் இணைந்து ஒரு பிளஸ் ஆவது போல் அதர்வாவும் நிமிஷாவும் மனமொத்த தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. குடும்பத்தில் வந்திருக்கும் புதிய வரவு குறித்து எல்லோரும் சந்தோஷத்தில் திளைக்க, நிமிஷாவிடம் குழந்தையை காட்டும் போது, அது தன் குழந்தை அல்ல என்று மறுக்கிறார் அவர்.
அதர்வா உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் நிமிஷா சொல்வதை ஆரம்பத்தில் மறுத்தாலும், பின்னர் அதில் உண்...
