கேம் ஆப் லோன்ஸ் _ விமர்சனம்
கேம் ஆப் லோன்ஸ் _ விமர்சனம்
எண்ணற்ற வசதிகளை நமக்குத் தரும் நவீன விஞ்ஞானத்தில், பல அளெகரியங்களும் சில ஆபத்துகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
உலகையே நம் கைக்குள் கொண்டு வரும் கைபேசியில் சூதாட்டம்கூட வந்துவிட்டது. அதேபோல் விரல் அசைவில் கடன் வழங்கப்படுகிறது.
கடன் வாங்குபவரின் திருப்பி செலுத்தும் திறன்பற்றி எல்லாம் சிறிதுகூட ஆய்வு செய்யாமல் உடனடியாக கடன் வழங்கும் செல்பேசி செயலிகள் வரமா? அல்லது சாபமா?
ஆன்லைன் சூதாட்டம்மூலம் ஒருவன் எப்படி பணத்தை இழந்து, கடன்களைப் பெற்று அதை அடைக்க முடியாமல் சிக்கி சீரழிவதை அழகாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யும் அருமையான படமாக வந்திருக்கிறது 'கேம் ஆப் லோன்ஸ்'. வேலையை இழந்து வருமானமின்றி வீட்டில் இருக்கும் விஷ்வா, வேலைக்குச் செல்லும் தன் மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்கிறான்.
சூதாடும் பழக்கமுள்ள விஷ்வா ஆன்லைன் செயலி மூலம் பணம் கடன் வாங்குகிறான்.
இந்தப் ...
