காந்தி கண்ணாடி _ விமர்சனம்
காந்தி கண்ணாடி _ விமர்சனம்
செக்யூரிட்டி வேலை பார்க்கும் பாலாஜி சக்திவேல், திருமண ஏற்பாடுகளை செய்து தரும் கே பி ஒய் பாலாவிடம் தன்னுடைய அறுபதாவது திருமண நிகழ்ச்சியை நடத்தித் தரும்படி கேட்கிறார்.
இதற்கான செலவுகளை எல்லாம் கணக்கிட்டு சுமார் 50 லட்ச ரூபாய் தேவைப்படும் என்று கூறுகிறார் பாலா.
"அவ்வளவு பணத்தை எப்படி உங்களால் திரட்ட முடியும்?" என பாலாவும் அவரது அலுவலகத்தில் உள்ளவர்களும் கிண்டல் செய்ய, தனது கிராமத்தில் உள்ள சொந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக பத்திரங்களைக் கொண்டு வந்து கொடுக்கிறார் பாலாஜி சக்திவேல்.
கிட்டத்தட்ட ஒரு ஜமீன்தார் அளவுக்கு வசதியான வாழ்க்கையை இளம் பருவத்தில் வாழ்ந்த பாலாஜி சக்திவேல், காதலுக்காகவும், தான் காதலித்த அர்ச்சனாவுக்காகவும் அந்த வாழ்க்கையை துறந்து, இப்போது செக்யூரிட்டியாக வாழ்ந்து வருவது தெரிகிறது.
திருமணத்திற்கு தேவைப்படும் பணத்தை கொண்டு வந்து பாலாவிடம...
