ஓர் இசையமைப்பாளருக்கு எவ்வளவுதான் வாய் மொழிப் பாராட்டுக்கள் குவிந்தாலும், அவரது தலை சிறந்த படைப்புகளும், ரீ மிக்ஸ்களும்அனைத்து பொழுதுபோக்குத் தளங்களிலும் பரபரப்பான வரவேற்பைப் பெறும்போதுதான், அவர் மறுக்க முடியாத வெற்றியாளராக அங்கீகாரம் பெறுகிறார். மிகப் பெரிதாக் கொண்டாடப்படும் சிம்பனி இசையாகட்டும் அல்லது நமது சொந்த நாட்டுப்புறப் பாடல்களாகட்டும் இந்த வெற்றிக்கு பல முன்னுதாரணங்களைக் காட்ட இயலும். 'ராட்சசன்' படத்துக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கிய இசை்கோர்வைகள், மற்றும் பின்னணி இசை யு ட்யூப் மற்றும் பல்வேறு இசைத் தளங்களில் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன. கேட்பவர்களின் நாடி நரம்புகளுக்கு சிலிர்ப்பூட்டும் இந்த இசை, 'எக்ஸ் ஃபைல் தீம்'ளின் இந்தியப் பதிப்பு என்று இசைஆர்வலர்களால் கருதப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக மனம் கவரும் இசை உருவாக்கத்திற்காக &...
இன்றைய தமிழ் சினிமா இசை உலகின் இளமை அடையாளமாக வெற்றி நாயகனாக வலம் வருபவர் அனிருத். தொடர் ஹிட் ஆல்பங்களை தந்துவரும் அவர் தன் குரல் மூலமும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இளம் தலைமுறையினர் அவர் குரலினை கொண்டாடி வருகின்றனர். மெலடி, ராப் என எந்தவகை இசைக்கும் ஒத்துப்போகக் கூடிய குரல் அவருடையது. அவர் குரல் உலகம் முழுதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியதாய் இருக்கிறது. தற்போது அனிருத் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கும் ஹரீஷ் கல்யாணின் “தனுசு ராசி நேயர்களே” படத்தில் ஒரு இளமை துள்ளும் பெப்பி மெலடி ஒன்றை பாடியிருக்கிறார்.
இது பற்றி இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது...
கொண்டாட்டம், குத்துப்பாடல், காதல் பாடல், சோகப்பாடல் என
எந்த ஒரு சூழலை எடுத்துக்கொண்டாலும் அனிருத் அங்கே பொருந்தக்கூடிய திடகாத்திர குரல் கொண்டவராக இருக்கிறார். அவர் தன் குரலால் பாடல் வரிகளில் மாயாஜாலம் நிகழ்த்தி பாடலை அடுத்த நில...