குட் டே_ விமர்சனம்
குட் டே_ விமர்சனம்
தன் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றுகிறார் பிரித்விராஜ்.
அந்த நிறுவனத்தின் மேலாளர் செய்யும் தவறுகளை பிரித்விராஜ் தட்டிக் கேட்டதால் அவமானப்படுத்தப்படுகிறார்.
தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளருடனும் பிரச்சனை ஏற்படுகிறது.
அவரது சம்பளம் வங்கிக் கணக்குக்கு வந்ததும் தன் தாயாருக்கும் மனைவிக்கும் பணம் அனுப்பிவிட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்.
சொந்தப் பிரச்சினை, அலுவலகப் பிரச்சனை என்று பல்வேறு மன அழுத்தங்களில் இருக்கும் பிரித்திவிராஜ், அன்று இரவு முழுவதும் தொடர்ந்து குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகள் தான் குட் டே திரைப்படம்.
கல்லூரியில் உடன் படித்த தோழி 'மைனா' நந்தினிக்கு போன் செய்து பேசுகிறார் பிரித்விராஜ்.
இதனால் நந்தினிக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.
நிறை போதையில் மேம்பாலம் ஒன்...
