ஹலோ மிஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு*
சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’!
நமஹா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் என்.குமார்லால் நேரு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹலோ மிஸ்’. இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா, ஜனகி சுரேஷ், ஜி.ஞானசம்பந்தன், செந்தில்குமாரி, புவனேஸ்வரி, பாலஹாசன், தினேஷ், KPY சரத், சுவாமிநாதன், சத்யன், பிர்லா போஸ், சிட்டிசன் மணி, மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் சண்டைக் காட்சிகளை S.R. ஹரி முருகன் கவனிக்கிறார். பிருந்தா மற்றும் தினேஷ் நடன இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர்.
பாடல்களுக்கு யுகபாரதி, விவேக், தாமரை, விவேகா ஆகியோர் பாடல்வரிகள் எழுதுகின்றனர். ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், பிரின்ஸ் ஜார்ஜ், சத்ய பிரகாஷ், கபில் கபிலன...
