Thursday, October 29

Tag: Idli kadai review

இட்லி கடை _ விமர்சனம்

Reviews
இட்லி கடை _ விமர்சனம் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற இந்த ஒன்றரை வரி குறளை வைத்து  எடுக்கப்பட்ட ஓர் அற்புதமான திரைப்படம் தான் இட்லி கடை என்று ஒரே வரியில் விமர்சனம் செய்து விடலாம். முந்தைய மூன்று படங்களில் இருந்து மாறுபட்ட முறையில் தனது இயக்கத்தில் உருவான  இட்லி கடை படத்தை கொடுத்திருக்கிறார் தனுஷ் . தேனி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சிறிய அளவில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார் ராஜ் கிரண். இந்தக் கடையின் சிறப்பு என்னவென்றால் ஆட்டுக்கல்லில் மாவை ஆட்டி, இட்லி சுட்டு விற்பனை செய்வதுதான். வருமானத்திற்கான தொழிலாக மட்டும் இட்லி கடையை கருதாமல் அதை ஆத்மார்த்தமாக செய்து வரும் ராஜ்கிரணைப் பார்த்து அவரது மகனான தனுஷுகும் சிறுவயதிலிருந்தே சமையல் கலையில் ஆர்வம் ஏற்படுகிறது. இதனால் கேட்டரிங் படித்து முடித்துவிட்டு இட்லி கடை தொழில் விரிவுபடுத்த எண்ணுகிறார். இதற்காக உரிமை கி...