Saturday, September 19

Tag: ilayaraja

இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’!

இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’!

News
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் 'தட்டுவண்டி' சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தட்டுவண்டி'. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், திலீபன், மேரி பென்சி குளோரியா மற்றும் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இப்படத்தை, 2021-ஆம் ஆண்டு இரண்டு மாநில அரசின் விருதுகளை வென்ற 'பில்டர் கோல்டு' திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். தனது முந்தைய படைப்பின் வெற்றியைத் தொடர்ந்து, வித்தியாசமான கதைக்களத்துடன் 'தட்டுவண்டி' திரைப்படத்தை ரசிகர்களுக்காக உருவாக்கியுள்ளார். படத்தின் அன...
இளையராஜாவின் இசைப் பயணத்தில் 50 ஆண்டுகள்!

இளையராஜாவின் இசைப் பயணத்தில் 50 ஆண்டுகள்!

News
மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் தனது இசைப் பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது, தமிழ் இசைக்கும் இசை உலகிற்கும் பெருமைமிகு தருணம்.🎺🎼🥁 எண்ணற்ற உணர்வுகளுக்கு இசையாய் இருந்த அந்த மகா கலைஞனை நீலம் புக்ஸ் கடந்த மூன்று வருடமாக கொண்டாடி வருகிறது.🎉🎶 இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி நமது கொண்டாட்டம் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. இசையைத் தாண்டி, ஒரு காலத்தையே வடிவமைத்த அந்த மேதையை கூடி கொண்டாடுவோம் 🎶 அனைவரும் வருக! மேலதிக தகவல்கள் விரைவில், Get Ready🎉🎶🎺🎼🥁...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!

News
இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை தரவுள்ளது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற வெற்றி திரைப்படங்கள் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார். இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்...
‘அரிசி’ படத்துக்காக விவசாயம் குறித்த பாடலை உருவாக்கிய இளையராஜா!

‘அரிசி’ படத்துக்காக விவசாயம் குறித்த பாடலை உருவாக்கிய இளையராஜா!

News
'இசைஞானி' இளையராஜா இசையில் ' அரிசி' படத்திற்காக இணைந்த பாடகர்கள் வேடன் - அறிவு கூட்டணி! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளரான இரா. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் பாடலுக்காக இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் முன்னணி பாடகர்களான அறிவு மற்றும் வேடன் ஆகியோர் இணைந்திருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' எனும் திரைப்படத்தில் இரா. முத்தரசன், சமுத்திர கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் V . ஜெரின் ஒளிப்பதிவு செய்ய, K. S. நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருக்கிறார். விவசாயத்தையும், விவசாயிகளையும் மையப்படுத்தி உணர்வு ...
‘கொம்புசீவி’ படத்திற்காக இணைந்து பாடிய இளையராஜா யுவன் ஷங்கர் ராஜா!

‘கொம்புசீவி’ படத்திற்காக இணைந்து பாடிய இளையராஜா யுவன் ஷங்கர் ராஜா!

News
இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து 'கொம்புசீவி' படத்திற்காக பாடியுள்ளனர்! *ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி' திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது* ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'கொம்புசீவி' திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர். கவிஞர் பா விஜய் வரிகளில் உருவான "அம்மா என் தங்ககனி, நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்" என்ற உணர்வுபூர்வமான பாடலை இசைஞானி இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து மிகவும் சிறப்பாக பாடியுள்ளனர். யு...
இசைஞானி இளையராஜா  இசை மழையில் “தேசிய தலைவர்”!

இசைஞானி இளையராஜா  இசை மழையில் “தேசிய தலைவர்”!

News
இசைஞானி இளையராஜா  இசை மழையில் "தேசிய தலைவர்"! *SSR சத்யா பிக்சர்ஸ்* வழ ங்கும் *இசைஞானி இளையராஜா* அவர்கள் இசை மழையில் SSR சத்யா Bsc.,M.A,Mphil., LLB, ஜெனிபெர் மார்கிரட் MA. B.Ed.. அவர்கள் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் பசும்பொன் சித்தர் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று காவியம் *தேசிய தலைவர்* இசை முன்னோட்டம் இன்று (10/10/25) சிறப்பாக நடந்தேறியது..*கலைப்புலி எஸ்.தாணு* அவர்கள் முன்னிலையில் *மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா* அவர்கள் குறுந்தகடை வெளியிட *இளையதிலகம் பிரபு* அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார்கள்... தேசிய தலைவர் தேவராகவே வாழ்ந்திருக்கும் வரலாற்று நாயகன் *ஜே.எம்.பஷிர்* தேவர் தோற்றத்திலேயே விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவரின் பராட்டுதலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது... இயக்கம் - *ஆர்.அரவிந்த்ராஜ் B.A,Df.Tech.* சிறப்பு விருந்தினராக திரு V. பழனிவேல...
‘ஜமா’ படத்தின் மதிப்பை உயர்த்திய இளையராஜா!

‘ஜமா’ படத்தின் மதிப்பை உயர்த்திய இளையராஜா!

News
“’ஜமா’ படத்தின் மதிப்பை தன் இசை மூலம் இசைஞானி இளையராஜா உயர்த்தியுள்ளார்”- நடிகர், இயக்குநர் பாரி இளவழகன்! நோக்கம் தூய்மையாகவும் தெளிவாகவும் இருக்கும்போது ஒரு இயக்குநர் சினிமா ரசிகர்களின் இதயங்களை வெல்வார். அத்தகைய வலுவான கதைக்களத்தைக் கொண்ட படங்கள் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும். அப்படியான படமாக பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘ஜமா’ திரைப்படம் அமைந்துள்ளது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று திரைக்கு வரவிருக்கிறது. இயக்குநர், நடிகர் பாரி இளவழகன் கூறும்போது, “’ஜமா' படத்தின் ஸ்கிரிப்டை எழுத முடிவு செய்தபோது, பார்வையாளர்களுக்கு திரையில் புதுவித அனுபவத்தை கொடுக்க விரும்பினேன். அங்கு அவர்கள் இதுவரை கண்டிராத உலகத்தை பார்ப்பார்கள். அர்ப்பணிப்புள்ள கலைஞர்கள் பொருளையும் புகழையும் பொருட்படுத்தாது அவர்களது மகிழ்ச்சி, உணர்ச்சிகள், வலிகள் என அர்ப்பணிப்போட...
பூஜையுடன் துவங்கிய பரபர திரில்லர் படம் ‘சாரா’!

பூஜையுடன் துவங்கிய பரபர திரில்லர் படம் ‘சாரா’!

News
Viswa Dream World தயாரிப்பில், பரபர திரில்லர் திரைப்படம் சாரா இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. !! சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படம் "சாரா" பூஜையுடன் இனிதே துவங்கியது !! Viswa Dream World நிறுவனம் சார்பில் R விஜயலக்‌ஷ்மி மற்றும் செல்லம்மாள் - குருசாமி G தயாரிப்பில், இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில் நாயகி சாக்‌ஷி அகர்வால் மற்றும் நாயகன் விஜய் விஷ்வா இணைந்து நடிக்கும் “சாரா” திரைப்படம் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. இவ்விழாவினில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா பேசியதாவது… இங்கு வந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி, வந்துள்ள அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள், இந்தப் பூஜையை விளக்கேற்றி துவக்கி வைத்த என்...
இசை என்றால் இளையராஜா தான், இயக்கம் என்றால் பாரதிராஜாதான்!

இசை என்றால் இளையராஜா தான், இயக்கம் என்றால் பாரதிராஜாதான்!

News
'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு: வரவேற்புரை வழங்கிய சுசீந்திரன் பேசியதாவது... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குந‌ர் இமயம் பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜாவை ஒன்று சேர்த்து படம் தயாரிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. ...
இசைஞானியை சந்தித்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தினர்!

இசைஞானியை சந்தித்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தினர்!

News
ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து சரித்திர சாதனை படைத்த இசை ஞானி இளையராஜா அவர்கள், புதிதாக அமைக்கப்பட்ட ரெக்கார்டிங் ஸ்டுடியோவில், இசைஞானி அவர்களுக்கு வாழ்த்துமடல் வழங்கி, முக்கனிகளான மா பலா வாழை கன்றுகளை வழங்கினோம். எமது சங்க தலைவர் கவிதா அவர்கள் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்ற தொடர் முயற்சியால், இன்று இசைஞானி அவர்கள் சந்திக்க நேரம் ஒதுக்கினார். புதிய ஸ்டுடியோவை பார்த்து மகிழ்ந்தோம். ஒவ்வொருவருடனும் இசைஞானி இளையராஜா அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டு இசையோடு உபசரித்து அனுப்பியது கூடுதல் மகிழ்ச்சி... நன்றி இசைஞானியே...மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு மற்றும் மேலாளர் ஸ்ரீராம் ஆகியோருக்கு சிறப்பு நன்றி. இப்படிக்கு, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்(TMJA)....