Monday, August 31

Tag: Ishari K Ganesh

டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா!

டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா!

News
'வெந்து தணிந்தது காடு' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார். இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் தயாராகும் ஏழாவது படம் இது. ‘எல் கே. ஜி’, ‘கோமாளி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’ என வரிசையாக பல திரைப்படங்களைத் தயாரித்து, தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தரமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல...
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார் முனைவர் ஐசரி கணேஷ்!

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார் முனைவர் ஐசரி கணேஷ்!

News
  தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார் முனைவர் ஐசரி கணேஷ்! தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் இந்த முறை இச் சங்கத்தின் கீழ் உள்ள 28 அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு சங்கங்களால் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஐசரி கணேஷ் அவர்கள் ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 15 ஆண்டுகளுக்கு மேல் ஐசரி கணேஷ் அவர்கள் இச் சங்கத்தின் மூத்த துணைத் தலைவராக இருந்து வருவதும், தினத்தந்தி நாளிதழ் நிறுவனரும், இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவருமான பா.சிவந்தி ஆதித்தன் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகளுக்கு மேல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது....
வெற்றிகளைக் குவிக்கும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்!

வெற்றிகளைக் குவிக்கும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்!

News
திரைப்படத் தொழில் என்பது செழிப்பாக இருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு தயாரிப்பாளரும் எடுக்கும் திரைப்படங்கள்  வெற்றி அடைந்து, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும். தங்கப் புதையல் வேட்டையைப்போல், ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமும் இந்த வெற்றியை நோக்கியே தங்கள் தயாரிப்பைத் தொடர்கின்றன. தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தொடர்ந்து தரும் வெற்றிகள் மூலம் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தை கவனிக்க வைத்திருக்கிறார். திருட்டு விசிடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் திரையரங்கில் படம் ஓடும் காலத்தை குறைக்க, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த 'கோமாளி' திரைப்படம், 80 நாட்களைக் கடந்து இன்னமும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு முறை ஓளிபரப்பு மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி உரிமைகளைத் தாண்டி இந்த வெற்றியை கோமாளி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வருண் மற...
கோமாளி படஇயக்குநருக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த ஐசரி கணேஷ்!

கோமாளி படஇயக்குநருக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த ஐசரி கணேஷ்!

News
டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் படநிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி படமும் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான கோமாளி விமர்சகர்களின் சிறப்பான பாராட்டுதல்களைப் பெற்றதுடன், ரசிகர்களிடையும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதால் வசூல் ரீதியில் பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்திருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஓர் ஆடம்பர ஹோண்டா சிட்டி காரை பரிசாக அளித்திருக்கிறார். இதைப்போலவே முன்னர் எல்.கே.ஜி. படத்தை வெற்றிப்படமாக்கிய  இயக்குநர் பிரபுவுக்கும் கார் ஒன்றை ஐசரி கணேஷ் பரி...
ஐசரி வேலன் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

ஐசரி வேலன் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

News
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உற்ற நண்பனாக விளங்கியவரும், அவரது அமைச்சரவையில் அறநிலையத்துறை துணை அமைச்சராகவும் இருந்த ஐசரி வேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மற்றும் மறைந்த ஜேகே ரித்தீஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.   பிறருக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற ஒரு விஷயத்தை தான் ஐசரி வேலன் தன் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டிருந்தார். என்னுடைய மிக நெருங்கிய நண்பன். மாணவர்களாக இருந்தபோது நட்பாக பழகினோம், பிறகு உறவினராக பழகினோம். கடைசி காலம் வரை நட்பாகவும், உறவாகவும் பழகினோம். புரட்சி தலைவரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த ஐசரி வேலன், ஒரு நாடகம் நடத்துவதற்காக எம்ஜிஆர் கொடுத்த வேனில் நாகர்கோவில் போகும்போது கூட கடைச...
முழுநீள பொழுதுபோக்கு படம் கோமாளி!

முழுநீள பொழுதுபோக்கு படம் கோமாளி!

News
ஜெயம் ரவியின் தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல, பிரதீப் ரங்கநாதன் போன்ற இயக்குனர்களும் கூட இதை எதிர்பார்த்திருந்தனர் போல இருக்கிறது. முந்தைய படமான "அடங்க மறு" உட்பட தொடர்ந்து கோபக்கார இளைஞர் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த ஜெயம் ரவி, அடுத்து வரவிருக்கும் கோமாளி படத்தை காமெடி மற்றும் எமோஷன் கலந்த முழுநீள பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.   இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறும்போது, "ஆம், நாங்கள் நகைச்சுவை அம்சங்களை கொண்ட குடும்பத்துடன் ரசிக்கும் முழுநீள பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாகவே, ஜெயம் ரவி சார் தனி ஒருவன் மற்றும் அடங்க மறு போன்ற திரைப்படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடிப்பதையே பார்த்து வந்திருக்கிறோம். இது காமெடி மற்றும் எமோஷன் கலந்த ஒரு குடும்பப் படம். இது சமூக ஊடகங்களில் பரவி வரும் எதிர்மறை கருத்துகளை பற்றி பேசும் படம், இறுதியில் நல்ல ஒ...
ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் ‘தேவி 2’!

ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் ‘தேவி 2’!

Uncategorized
பொதுவாக 'திகில்' படங்கள் எப்போதும் குடும்ப பார்வையாளரகளின் விருப்ப படமாக  இருந்ததில்லை. அவர்கள் ஓய்வு நேரங்களில் ஜாலியாக ஏதாவது படத்தை பார்க்க வேண்டும் என்றே விரும்புபவர்கள். இயக்குனர் விஜய் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு அணுகுமுறையை தேவி படத்தில் கையாண்டிருந்தார். அதனாலேயே குடும்ப ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. 'பேய்' படங்களிலேயே சற்று வித்தியாசமாக உருவானது தேவி. பயமுறுத்துவதை தாண்டி நம்மை விலா நோக சிரிக்க வைத்தது தேவி. இப்போதும் கூட, டிஜிட்டல் தளங்கள் மற்றும் டிவி சேனல்களில் பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கிறது. இந்த படத்திற்கான ஆர்வம் இன்னும் அப்படியே இருக்கும் நிலையில், நம்மை இன்னும் உற்சாகப்படுத்த இருக்கிறது தேவி 2 படக்குழு. ஆம், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தேவி 2 படம் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக...