Friday, May 1

Tag: jai

ஜெய் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’!

ஜெய் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’!

News
ஜெய் நடிப்பில் அடுத்து வெளியாகும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையான படங்களாக அமைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. தற்போது அவர் நடித்து வரும் புதிய படமான 'எண்ணித் துணிக' அதிக கொந்தளிப்பு மிக்க திரில்லர்  வகைப் படமாக தயாராக இருக்கிறது. ரெயின் அண்ட் ஏரோ என்டர்டெயிண் மெண்ட் நிறுவனத்துக்காக சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் எஸ்.கே.வெற்றி செல்வன் என்ற புதியவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் வசந்திடமும் ஒளிப்திவாளர் ரவி கே.சந்திரனிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர், ஏராளமான விளம்பரப் படங்களையும் எடுத்தவர். இன்று காலை (11-12-2019) 'எண்ணித் துணிக' படத்தின் படப்பிடிப்பு சம்பிரதாய பூஜையுடன் நடந்தது. இதில் படத்தில் நடிக்கும் நடிக நடிகையருடன் படத்தில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர். படம் குறி்த் து இயக்குநர் வெற்றி செல்வ...
ஜெய் ஜோடியாக அதுல்யா ரவி!

ஜெய் ஜோடியாக அதுல்யா ரவி!

News
ஒரு திரை ஜோடி தங்கள் அபரிமிதமான கெமிஸ்ட்ரியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும்போது, அதே ஜோடியை மீண்டும் மீண்டும் திரையில் ஜோடியாக நடிக்க வைக்க அணுகுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இதற்கு ஒரு விதிவிலக்கான விளக்கமாக மாறி வருகின்றனர். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் 'கேப்மாரி' என்ற சமீபத்திய படம் ஒன்றில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த குறுகிய இடைவெளியிலேயே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே கூறும்போது, “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம். ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை போன்றது. இருப்பினும்...
சூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்!

சூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்!

News
'பிரேக்கிங் நியூஸ்’ என்ற சொல் திரையில் பளிச்சிடும்போதே, என்ன செய்தி என்பதை பார்க்க எல்லோரும் ஒரு நிமிடம் நின்று கவனித்து விட்டு தான் செல்கிறார்கள் என்பது வெளிப்படையானது. இதற்கு எந்த பகுதி, மொழி என்றெல்லாம் பொருட்படுத்தாமல் அனைவரையும் ஈர்க்கும் சக்தி உள்ளது. அதன்படி, ஜெய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படமும் இந்த சூழலுக்கு உட்பட்டது. அந்த படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமுமே தலைப்பு செய்தியாக மாறி விடுகிறது. ஜெய், பானு ஸ்ரீ, தேவ் கில் மற்றும் ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் “பிரேக்கிங் நியூஸ்” படப்பிடிப்பு அதிக வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஹைலைட்டான ‘சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி’ படம் என்பதை படக்குழு உறுதிப்படுத்தினாலும், படத்தின் கதை என்னவென்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.  படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இது குறித்து கூறும்போ...
விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் “காக்கி”

விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் “காக்கி”

News
ஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் பிரம்மாண்டமாக தயாரிக்க, அ.செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ் நடிப்பில் உருவாகும் படம் "காக்கி"   இது வரை சினிமா வரலாற்றில் பல போலிஸ் கதை பின்னனியில் உருவான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் காக்கி திரைப்படத்தில் வரும் முதன்மை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் கதையமைப்பும் காக்கி துணியை மய்யப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகவிருக்கிறது "காக்கி"   இப்படத்தில் விஜய் ஆண்டனி முன்று வித்தியாசமான தோற்றங்களிலும், சத்யராஜ் இரண்டும் வித்தியாசமான தோற்றங்களிலும் நடிக்கவுள்ளனர்.   வாய்மை படத்தை இயக்கிய அ.செந்தில் குமார் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.    இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோஸ்ஸ...