விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் “காக்கி”

0

 600 total views,  1 views today

ஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் பிரம்மாண்டமாக தயாரிக்க, அ.செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ் நடிப்பில் உருவாகும் படம் “காக்கி”
 
இது வரை சினிமா வரலாற்றில் பல போலிஸ் கதை பின்னனியில் உருவான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் காக்கி திரைப்படத்தில் வரும் முதன்மை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் கதையமைப்பும் காக்கி துணியை மய்யப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகவிருக்கிறது “காக்கி”
 
இப்படத்தில் விஜய் ஆண்டனி முன்று வித்தியாசமான தோற்றங்களிலும், சத்யராஜ் இரண்டும் வித்தியாசமான தோற்றங்களிலும் நடிக்கவுள்ளனர்.
 
வாய்மை படத்தை இயக்கிய அ.செந்தில் குமார் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். 
 
இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோஸ்ஸில் துவங்கியது. இப்படத்தின் முதல் காட்சியை திருமதி.பாத்திமா விஜய் ஆண்டனி துவக்கிவைத்தார். 
 
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
 
தயாரிப்பு – தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் (ஓபன் தியேட்டர்ஸ்)
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அ.செந்தில் குமார்
ஒளிப்பதிவு – மனோஜ் பரம்ஹம்சா
இசை – அவ்ஹத்
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
படத்தொகுப்பு – ரூபன்
கலை – குமார்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
 
Share.

Comments are closed.