Tuesday, November 17

Tag: jawan

அனிருத் இசை மற்றும் குரலில் ஜவான் படத்தின் முதல் பாடல்!

அனிருத் இசை மற்றும் குரலில் ஜவான் படத்தின் முதல் பாடல்!

News
அனிருத் இசை மற்றும் குரலில் ஜவான் படத்தின் முதல் பாடல் "வந்த எடம்" விஷுவல் விருந்தாக வெளிவந்துள்ளது! இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'ஜவான்' படத்தின் முதல் பாடலான 'வந்த எடம்' இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன்-அதிரடி காட்சிகள் மற்றும் அட்ரினலின்-பம்பிங் சாகசத்தால் நிறைந்த ப்ரிவ்யூ பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய பிறகு, இப்படம் இப்போது அனிருத்தின் இசையமைப்பில் "வந்த எடம்" பாடல் இணையத்தைத் தீப்பிடிக்க வைத்துள்ளது. கொண்டாட்டமிக்க ‘வந்த எடம்’ பாடல், அனிருத்தின் இசையில் உயிரை அதிரச் செய்யும் ஒலியோசையில், அனைவரையும் உற்சாக ஆட்டமாட வைக்கிறது. இந்த பாடலுக்குப் புகழ்பெற்ற நடன இயக்குநர் ஷோபி நடனம் அமைத்துள்ளார், அவரது நடன அமைப்பு பார்வையாளர்களைத் துள்ளல் நடனம் போட வைக்கிறது. பிரபல முன்னணி பாடலாசிரியர் விவேக் எழுதிய பாடல் வரிகளுடன், அனிருத்தின் சமீபத்திய வெற்றிகள...
‘ஜவான்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

‘ஜவான்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

News
ஜவானின் ஒலிக்கு தயாராகுங்கள்! இன்று மதியம் 12:50 மணிக்கு ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் முதல் பாடல் வெளியீடு.. ஹிந்தியில் 'ஜிந்தா பண்டா' என்றும், தமிழில் 'வந்த இடம்' என்றும், தெலுங்கில் 'தும்மே துலிபெலா' என்றும் வெளியாகிறது. ஜவானின் முதல் பாடல்- பார்வையாளர்களுக்கு ஆக்சன் நிரம்பிய காட்சியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல், இன்று மதியம் 12: 50 மணிக்கு வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. 'ஜவான்' திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.‌...
‘ஜவான்’ பட  வில்லன் தோற்றத்தை வெளியிட்ட ஷாருக்கான்!

‘ஜவான்’ பட வில்லன் தோற்றத்தை வெளியிட்ட ஷாருக்கான்!

News
'ஜவான்' பட வில்லனின் தோற்றத்தை ஷாருக்கான் வெளியிட்டார். ஜவானின் புதிய போஸ்டரில் 'மரணத்தின் வியாபாரி' என்ற குறிப்புடன் விஜய் சேதுபதி... எப்போதும் மிரட்டும் வில்லனுக்காக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்..!* ஷாருக்கானின் ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'ஜவான்' மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், படத்தின் வலிமைமிக்க எதிரியின் தோற்றத்தை வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகர்களின் உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வெளியிட்ட ஒரு புதிய போஸ்டரில் விஜய் சேதுபதியை, 'மரணத்தின் வியாபாரி' என அறிமுகப்படுத்துகிறார். இரண்டு வலிமைமிக்க நட்சத்திர கலைஞர்களுக்கு இடையே மறக்க முடியாத மோதல் இருக்கிறது என உறுதி அளிக்கிறார். 'ஜவான்' பெரிய திரையில் இந்த இரண்டு நட்சத்திரங்களின் முதல் சந்திப்பை குறிக்கிறது. அண்மையில் வெளியான அதிரடி மிக்க பிரிவியூவில் ஏற்கனவே உயர்...
“ஜவான்” படத்திலிருந்து அடுத்து வெளியாகும் கேரக்டர்! போஸ்டர்

“ஜவான்” படத்திலிருந்து அடுத்து வெளியாகும் கேரக்டர்! போஸ்டர்

News
“ஜவான்” திரைப்படத்திலிருந்து அடுத்ததாக யாருடைய கேரக்டர் போஸ்டர் வெளியாகும்? உங்களால் யூகிக்க முடிகிறதா ? இதோ படக்குழு தந்த க்ளூ! கிங்கான் ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘ஜவான்', ரசிகர்களின் உற்சாகத்தை புதிய உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளது. சமீபத்தில் வெளியான விறுவிறுப்பான ப்ரிவ்யூ, மொட்டை தலையுடன் புது அவதாரத்தில் தோன்றும் SRK, அதிரடி அவதாரத்தில் காட்சியளிக்கும் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டரைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் இப்போது படத்தின் மற்றொரு புதிய கதாப்பாத்திரம் பற்றிய சிறு க்ளிம்ப்ஸ வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்னீக் பீக் ரசிகர்களிடம் அது யாராக இருக்குமென்ற பெரும் ஆவலை தூண்டியுள்ளது. 'ஜவான்' படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் சமூக ஊடகங்களின் வழியே, படம் குறித்தும் அடுத்ததாக வெளியாகும் கதாப்பாத்திரம் பற்றிய குறிப்பையும் வெளியிட்டுள்ளனர். அவர்கள்...
ஜவான் படத்தின் நடன இயக்குனராக மாறினாரா SRK !

ஜவான் படத்தின் நடன இயக்குனராக மாறினாரா SRK !

News
ஜவான் படத்தின் "பாட்டு பாடவா" பாடலுக்கு ஷாருக்கின் வைரல் நடனம்! பிரபலமான ரெட்ரோ பாடலான “பாட்டு பாடவா” பாடலைப் பாடுவதன் மூலம் ஷாருக் தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார், அவரது கதாபாத்திரத்தின் அச்சுறுத்தும் ஆற்றலை மிக அற்புதமான முறையில் படம்பிடித்து, காட்சிக்கு ஒரு புதிரை சேர்த்துள்ளார். நமக்கு கிடைத்த தகவல் படி, "பாட்டு படவா" பின்னணியில் இசைக்கும் இந்த குறிப்பிட்ட காட்சியில் நடனப் படிகளை அறிமுகப்படுத்தும் யோசனையை ஷாருக்கான் உருவாக்கினார் என்று நாங்கள் அறிந்தோம். அந்த நடனம் அக்காட்சியை மாற்றியது மற்றும் அதை மிகவும் வசீகரமாக்கியுள்ளது. ஷாருக்கானின் மேம்படுத்தப்பட்ட நடன அசைவுகள் பார்வையாளர்களிடையே மிகவும் பிடித்தவையாக மாறியுள்ளன, அவரின் நடனம் சமூக ஊடகங்களில் வைரலாகி இணையம் முழுவதும் மீம்ஸாக உருவாக்கியுள்ளன. பன்முகத் திறனின் உருவமான ஷாருக்கான் மீண்டும் தனது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ...
சாதனைகள் படைக்க காத்திருக்கும் “ஜவான்” தி

சாதனைகள் படைக்க காத்திருக்கும் “ஜவான்” தி

News
தென்னிந்தியாவில் சாதனைகள் படைக்க காத்திருக்கும் ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம் ! வட இந்தியாவில் சாதனைகள் செய்து, பாகுபலி படம் முதல் நாளில் 100 கோடியைக் குவித்தது போல், ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம் தென்னிந்தியாவில் சாதனைகள் செய்து, முதல் நாளில், 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூலிக்கும் - வர்த்தக வட்டாரங்கள் கணிப்பு ! வடக்கில் பாகுபலி செய்ததைப் போல, ஷாருக்கானின் ஜவான் தெற்கில் ரிலீஸ் நாள் சாதனைகளை முறியடிக்கும்! வசூலில் ரூ. 100 கோடியைத் தாண்டும் என வர்த்தக ஆய்வாளர்கள் கணிப்பு ! கிங்க்கான் ஷாருக்கான் நடிப்பில், இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் "ஜவான்". ரசிகர்கள், பார்வையாளர்கள் மட்டுமின்றி வர்த்தக வட்டாரங்களிலும் இப்படம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. சமீபத்திய வெளியான ப்ரிவ்யூ, கிங் கானை முரட்டுத்தனமான மற்றும் இதுவரை கண்டிராத அவதாரத்தில் காட்சிப்படுத்தியிருந்த...
ஜவான் குறித்து இணையத்தில் பகிர்ந்த ஷாருக்கான்!

ஜவான் குறித்து இணையத்தில் பகிர்ந்த ஷாருக்கான்!

News
ஃபரா கான், வைபவி மெர்ச்சன்ட் & ஷோபி ஆகியோரின் கடுமையான உழைப்பில் அசத்தலான ‘ஜவான்’ பாடல்கள், ஜவான் குறித்து இணையத்தில் பகிர்ந்த ஷாருக்கான்! ஷாருக்கானுக்குத் தனது ரசிகர்களை எப்படி உற்சாகப்படுத்துவது அவர்களை ஆச்சர்யத்தி ஆழ்த்துவது எப்படி என்பது அத்துபடி. குறிப்பாக அவரது நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் 'ஜவான்' படம் குறித்துத் தொடர் விருந்து வைத்து வருகிறார். ப்ரிவ்யூ மற்றும் சமீபத்திய புதிய போஸ்டர், ரசிகர்களுக்கு ஜவான் மீதான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த கிங் கானுடன் தங்கள் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வரும் ரசிகர்கள், ‘ஜவான்’ தொடர்பான தகவல்களைத் தொடர்ச்சியாகக் கேட்டு வருகின்றனர். #AskSRK அமர்வின் போது 'ஜவான்' படத்தின் போஸ்டரை வெளியிட்டு ஷாருக் தனது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்த அதே வேளையில், படத்தின் பாடல்களைக்...
ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் ‘பதான்’ பட சாதனையை முறியடிக்கும்

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் ‘பதான்’ பட சாதனையை முறியடிக்கும்

News
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸில் 'பதான்' பட சாதனையை முறியடிக்கும் சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ஜவான் பட ப்ரிவ்யூ இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் சூப்பர்ஹிட்டாக மட்டுமல்லாமல் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்பதைத் தெளிவாக நிரூபித்துள்ளது. அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் தேசம் முழுவதிலும் இருந்து முன்னணி நட்சத்திர நடிகர்கள் பங்கு பெற்றிருக்கும் இப்படம் தான், சந்தேகத்திற்கு இடமின்றி இப்போதைய ஹாட் டாபிக். ஆனால் இது வெறும் ஆரம்பம் தான். பதான் மூலம் ஷாருக்கான் இந்தியத் திரை சாதனைகளில் தன் பெயரைப் பொறித்துள்ளார், ஜவான் அதை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்லும். பதானின் வெற்றியால், ஜவான் ரிலீஸுக்கு முன்பாகவே படத்தின் உரிமையை டி-சீரிசுக்கு விற்றதன் மூலம், 250 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. இந்நிலையில் ஜவான் நிச்சயம் தென்னிந்தியாவில் சிறந்த வர்த்தகத்தைச் செய்யும். இயக்குநர் அட்ல...
ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ஷாருக்கான்!

ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ஷாருக்கான்!

News
#AskSRK அமர்வின் இறுதியில் ஜவானின் முதல் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் ஷாருக்கான்..! ஜவானின் படத்தைப் பற்றிய உற்சாகமும், உத்வேகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜவான் மீதான அனைத்து அன்பையும் அவர் ரசிகர்களுடன் இணைக்க ஷாருக்கான் இன்று தனது பிரபலமான #AskSRK அமர்வுகளில் ஒன்றை நடத்தினார். #AskSRK அமர்வை நிறைவு செய்யும் தருணத்தில் ரசிகர்களுடன் சில வேடிக்கையான அரட்டைப் பேச்சுகளுக்குப் பிறகு, படத்தின் போஸ்டரை வெளியிட்டு, ஷாருக்கான் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஷாருக்கான் தனது #AskSRK அமர்வுகளில் இதற்கு முன் இதை செய்ததில்லை என்பதால், அவரது இந்த செயல்.. அவரது ரசிகர்கள் அனைவருக்கும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. ஷாருக் கான் ஜவானின் புதிய கூல் போஸ்டரை வெளியிட்டார். அதில் அவரது தீவிரமான 'வழுக்கை' தோற்றத்தை காட்டினார். இது ஜவான் ப்ரி...
முந்தைய சாதனைகளைத் தகர்த்த ஷாருக்கானின் ‘ஜவான்’

முந்தைய சாதனைகளைத் தகர்த்த ஷாருக்கானின் ‘ஜவான்’

News
ஷாருக்கானின் ஜவான் பிரிவியூ- முந்தைய சாதனைகள் அனைத்தையும் தகர்த்து விட்டது! 24 மணி நேரத்தில் எந்த ஒரு இந்திய திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு அதிக பார்வைகளை பெற்ற வீடியோவாக சாதனை படைத்திருக்கிறது. இந்திய திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தின் டீசர்கள் மற்றும் ட்ரெய்லர்கள் 24 மணி நேரத்தில் எவ்வளவு பார்வையை பெற்றிருக்கிறது என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், முந்தைய அனைத்து சாதனைகளையும் ஜவானின் வெளியீட்டுக்கு முந்திய வீடியோ எளிதாக முறியடித்திருக்கிறது. அனைத்து தளங்களிலும் 112 மில்லியன் பார்வைகளை பெற்ற வீடியோவாக அபிரிமிதமான சாதனைகளைப் படைத்து, தற்போதுள்ள வரையறைகளை உடைத்து, இந்திய திரைப்படத் துறைக்கு ஒரு புதிய உச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் 24 மணி நேரத்தில் அதிகளவில் பார்வையிடப்பட்ட வீடியோவாக ஜவானின் பிரிவியூ முதலிடத்தில் உள்ளது. இது ஷாருக்கானின் பரவலான புகழ்... படத்தை படத்தின் உலகளாவி...