ஜாக்கி _ விமர்சனம்
ஜாக்கி _ விமர்சனம்
மதுரையை சுற்றி உள்ள கிராமங்களில் நடைபெறும் சேவல் சண்டை போல், மற்றும் ஒரு புகழ் பெற்ற பாரம்பரிய போட்டி கிடா சண்டை ஆகும்.
ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார் செய்வதுபோல் நிறைய செலவு செய்து பயிற்சி அளித்து போட்டியில் கலந்து கொள்ளும் கிடாவை வளர்ப்பார்கள்.
வீர விளையாட்டாக தொடங்கும் போட்டி, பின்னர் சண்டையாக மாறி, கௌரவ பிரச்சனை வடிவெடுத்து, வெட்டு குத்து என்று ரணகளமாக மாறுவது சாதாரண விஷயம்தான்.
இந்தப் பின்னணியை கொண்டு உயிர்ப்புடன் ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரகபல்.
சாதாரணமாக வீட்டில் வளர்க்கப்படும் ஓர் ஆட்டுக்குட்டியை கூட சினிமாவில் நடிக்க வைப்பது கடினமான செயல் என்ற நிலையில் தலையிலேயே முட்டி ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் கிடா வகை ஆட்டை வைத்து இத்தகையா ஒரு படத்தை கொடுத்ததற்காக படக்குழுவை தாராளமாக பாராட்டலாம்.
மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டும் யுவன் கிருஷ்ணா, காளி...
