காக்கி சர்க்கஸ்: இணைய தொடர் விமர்சனம்
காக்கி சர்க்கஸ்: இணைய தொடர் விமர்சனம்
சிறைச்சாலை என்றாலே பொது புத்தியில் ஒரு பிம்பம் பதிந்திருக்கும்.
ஆனால், ஒரு கிளைச் சிறைச்சாலையை மையமாக வைத்து, அங்கு நடக்கும் ஒரு விசித்திரமான திருட்டை மிக சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை உணர்வோடும் காட்சிப்படுத்தியிருக்கிறது இந்த 'காக்கி சர்க்கஸ்' இணையத் தொடர்.
ஒரு கிளை சிறைச்சாலையில் ஜெயிலராக பணி புரியும் முனீஷ்காந்த் எழுத்தாளராகவும் இருக்கிறார். புத்தக வாசிப்பு பழக்கம் என்பது கைதிகளை மனமாற்றம் செய்து, அவர்களை திருத்தும் என்று திடமாக நம்புகிறார். சிறைச்சாலையை வெறும் தண்டனைக்கூடமாகப் பார்க்காமல், மனிதர்களைப் பண்படுத்தும் இடமாக நினைக்கிறார்.
கைதிகளுக்காக நூலகம் அமைப்பதும், தான் எழுதும் புத்தகங்கள் மூலம் அவர்களைத் திருத்த முயல்வதும் என ஒரு வித்தியாசமான அதிகாரியாக அவர் கவனம் ஈர்க்கிறார்.
அவருக்கு நேர்மாறாக, காவல் சீருடையின் கம்பீரத்தையும் அதிகாரத்த...
