Wednesday, June 18

Tag: Kabilan vairamuthu

‘ஆகோள்’ என்ற நாவலின் இரண்டாம் பாகம்!

‘ஆகோள்’ என்ற நாவலின் இரண்டாம் பாகம்!

News
குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்ட கபிலன்வைரமுத்துவின் மாக்கியவெல்லி காப்பியம் வெளியானது, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியம் என்ற நாவலை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். இது 2022 ஆம் வெளியான ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம். பிரிட்டிஷ் இந்தியாவின் குற்றப் பரம்பரை சட்டத்தையும் அதன் நவீன பரிணாமங்களையும் விவாதிக்கும் முறையில் கபிலன் வைரமுத்து இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தில் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த மாக்கியவெல்லி இரண்டாம் பாகத்தின் மைய கதாபாத்திரமாக வருகிறான். மதுரை மாவட்டத்துக்குட்பட்ட எட்டு நாடுகள் என்ற பகுதியில் கதை நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 1801 தொடங்கி 2057 வரையிலான காலக்கட்டத்தின் கதையாக இது எழுதப்பட்டிருக்கிறது. பல வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகி...
கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்’ நாவல் அப்படியே நடக்கிறதா?

கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்’ நாவல் அப்படியே நடக்கிறதா?

News
கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவலில் வரும் டிஜிடல் அபொகலிப்ஸ்… எதிர்காலத்தில் நடக்கும் என சித்தரிக்கப்பட்டது தற்போது நடக்கிறது… உலகம் முழுக்க விண்டோஸ் மென்பொருள் பாதுகாப்பு சேவையில் ஏற்பட்ட குளறுபடியால் விமானம், வங்கி என பொதுமக்களின் அடிப்படை சேவைகள் முடங்கியிருக்கின்றன. இது தொழில் நுட்ப கோளாறா அல்லது திட்டமிட்ட இணையவெளி தாக்குதலா என்று வல்லுனர்கள் இந்த சூழலை விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் என்ற நாவலில் 2032 ஆம் ஆண்டு ஜெல்லி என்ற வைரஸ் ஊடுருவி பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகள் முடக்கப்படுவது போல எழுதப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் அபோகலிப்ஸ் எனும் மெய்நிகர் காவுகோள் குறித்து கபிலன் எழுதியிருக்கிறார். தற்போது அதே போன்ற சூழல் உருவாகியிருப்பதால் கபிலன் வைரமுத்துவின் நாவலை வாசகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். என்ன நடக்கிறது என்று பிரபல ஆங்கி...
கபிலன் வைரமுத்து எழுதிய இரண்டு பாடல்கள் youtube தளத்தில் முதலிடம்!

கபிலன் வைரமுத்து எழுதிய இரண்டு பாடல்கள் youtube தளத்தில் முதலிடம்!

News
யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT - இந்தியன் 2* *இரண்டு பாடல்களையும் எழுதியவர் கபிலன்வைரமுத்து!  நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம் வெளியானது. பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது. நடிகர் விஜயும் பவதாரணியும் பாடிய இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடும் இதமான பாடல் என்று இசை ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து calendar song என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் உலக அழகி டெமி இதில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த இரண்டு பாடல்களும் யூ டியூப் அகில இந்திய இசை ...
கவிதைகளுக்கு இசை அமைக்கும்  சின்னஞ்சிறு பாடல்கள்

கவிதைகளுக்கு இசை அமைக்கும் சின்னஞ்சிறு பாடல்கள்

News
கவிதைகளுக்கு இசை அமைக்கும் சின்னஞ்சிறு பாடல்கள் கபிலன்வைரமுத்து பாலமுரளிபாலு மற்றும் இசைக் கலைஞர்களின் உருவாக்கம் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளராக விரும்பும் இளைஞர்கள் தங்கள் மாதிரி படப்பிடிப்புக்கு இந்த பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கபிலன்வைரமுத்து அறிவிப்பு எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து, இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இணைந்து சின்னஞ்சிறு பாடல்கள் என்ற இசை ஆல்பம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார்கள். கபிலன்வைரமுத்து எழுதிய கடவுளோடு பேச்சுவார்த்தை, மனிதனுக்கு அடுத்தவன், மழைக்கு ஒதுங்கும் மண்பொம்மை போன்ற பல்வேறு கவிதை நூல்களில் இருந்து ஐந்து கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை மூன்று நிமிடங்களுக்கு மிகாத சிறிய பாடல்களாக வடிவமைத்திருக்கிறார்கள். ‘அணுவைத் துளைத்து ஏழ்கடல் புகுத்துவது மாதிரி சிறிய பாடல்களுக்குள் ஆழ்மன உணர்வுகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான் எண்ணம்’ என்று ...