கடுக்கா _ விமர்சனம்
கடுக்கா _ விமர்சனம்
கொங்கு பகுதியில் உள்ள கிராமம்தான் கதைக்களம். அங்கு வசிக்கும் எளிய மனிதர்கள் தான் படத்தின் பாத்திரங்கள்.
உருப்படியான வேலை எதுவும் இல்லாமல் நீட்டாக உடை உடுத்திக் கொண்டு வேலைக்கு செல்வது போல் புறப்பட்டு சென்று, பஸ் ஸ்டாப்பில் நின்று பெண்களை சைட் அடிப்பதையே வேலையாக கொண்டு இருக்கிறார் நாயகன் விஜய் கௌரிஷ்.
இந்த சூழலில் அவரது வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு புதிதாக குடி வருகிறார் நாயகி ஸ்மேகா.
ஸ்மேகாவிடம் கௌரிஷ் தன் காதல் வலையை வீச, வேண்டா வெறுப்பாக அவரும் நாயகனை காதலிக்க தொடங்குகிறார்.
அத்துடன் வேலைக்கு போய் சம்பாதிக்கும்படி அறிவுரையும் சொல்கிறார்.
சுவர் விளம்பரம் எழுதும் வேலையை செய்து வரும் கௌரிஷின் நண்பன் ஆதர்ஷும் நாயகியை காதலிப்பதாக சொல்ல, அவருக்கும் காதலில் ஓகே சொல்கிறார் நாயகி.
இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனி வேலைக்கு செல்கின்றனர்.
ஒரு நாள் தாங்கள் இர...
