Monday, February 16

Tag: Kajal Aggarwal

காஜல் அகர்வாலின் ஹாரர் காமெடி “கோஸ்டி” !

News
காஜல் அகர்வால் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் ஹாரர் காமெடி படத்திற்கு “கோஸ்டி” என தலைப்பிடப்பட்டுள்ளது. “குலேபகாவலி” ஹிட் படத்தை இயக்கிய இயக்குநர் S.கல்யாண் இப்படத்தினை இயக்குகிறார். தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் கூறியதாவது... பல வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக மிளிரும் நடிகை காஜல் அகர்வால் அவர்களுடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. இப்படத்தின் கதாப்பாத்திரத்திற்காக அவர் முழு உழைப்பை தந்திருக்கிறார். காவல் அதிகாரியாக கச்சிதமாக தன்னை பொருத்திகொண்டிருக்கிறார். அவரது கதாப்பாத்திற்கு இப்படத்தில் பல ஆக்சன் காட்சிகள் உண்டு. அதற்காக அவர் கடுமையாக பயிற்சி எடுத்து தன்னை தயார்படுத்தி கொண்டார். இப்படம் அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக, மிகப்பெரும் வெற்றிப்படமாக இருக்கும். இயக்குநர் S.கல்யாண் கூறியதாவது... காஜல் அகர்வால் அவர்களுடன் வேலை செய்தது அற்புதமான...
தூங்காமல் விழித்து இருந்து “லைவ் டெலீகாஸ்ட்” வெப் தொடரில் பணி புரிந்த காஜல் அகர்வால்!

தூங்காமல் விழித்து இருந்து “லைவ் டெலீகாஸ்ட்” வெப் தொடரில் பணி புரிந்த காஜல் அகர்வால்!

News
டிஸ்னி ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளி வர இருக்கும் "லைவ் டெலிகாஸ்ட்" தொடர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க , காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 12 ஆம் தேதி உலகெங்கும் ஒளிபரப்பு ஆக உள்ளது. மாந்த்ரீக சக்திகள் நிறைந்த , ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் ஒரு தொலைக் தொடர் ஒன்றை படமாக்கப் படும் போது ஏற்படும் வினோத அனுபவங்களின் தொகுப்பே "லைவ் டெலிகாஸ்ட்". தொடரில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட காஜல் அகர்வால் "நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்து எடுத்த இடம் மிக மிக பொருத்தமானது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது.மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீடு அங்கு தனித்து இருந்த வீடாகும். படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயே தான் நடந்தது. படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம் தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்க கூட முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேய...
பெண்களுக்கெதிரான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்”!

பெண்களுக்கெதிரான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்”!

News
மிக அழகான முறையில் அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கெதிரான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் நடிகை காஜல் அகர்வால். பல வித பின்னணியில் பெண்களுக்கெதிராக இல்லங்களில் நிகழ்த்தப்படும் வன்முறையை கூறுவதாக அமைந்திருக்கும் இந்த வீடியோவை திரு TK உருவாக்கியுள்ளார். வீடியோ பாடலை இயக்கிய  இயக்குநர் திரு  TK இது குறித்து கூறியதாவது... எங்கள் மொத்த குழு சார்பாக இப்பாடலின் தன்மையை  புரிந்துகொண்டு, எங்களை பாராட்டி, வெளியிட்டமைக்கு நடிகை காஜல் அகர்வால் அவர்களுக்கு நன்றி. இப்பாடலை வெளியிட சரியானவர் அவர் என்பது எங்கள் மொத்த குழுவின் கருத்து. சினிமாவிலும் சரி, இயல்பு வாழ்க்கையிலும் சரி, பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக, எப்போதும் குரல் கொடுத்து வருபவர் அவர். அவர் எங்கள் பாடலை வெளியிட்டது எங்கள் அனைவருக்கும் பெருமை. சிங்கப்பூரை சார்ந்த o...
தொடர்ந்து வெற்றி நடை போடும்  “கோமாளி”!

தொடர்ந்து வெற்றி நடை போடும் “கோமாளி”!

News
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள படம் “கோமாளி”. இந்தாண்டில் வெளியான படங்களில் “கோமாளி” படம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது மனங்களையும் வென்று தற்போதைய தமிழ் திரையுலகில் 50 நாட்களை கடந்து வசூல் சாதனை படைத்து திரையரங்கில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி பலவித தோற்றங்களில் நாயகனாக கலக்க,  காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளனர். யோகிபாபு, சாரா, கே எஸ் ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா குழு இசையமைத்துள்ளார்கள். இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா தனியார் அரங்கில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இ...
கோமாளி படஇயக்குநருக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த ஐசரி கணேஷ்!

கோமாளி படஇயக்குநருக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த ஐசரி கணேஷ்!

News
டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் படநிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி படமும் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான கோமாளி விமர்சகர்களின் சிறப்பான பாராட்டுதல்களைப் பெற்றதுடன், ரசிகர்களிடையும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதால் வசூல் ரீதியில் பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்திருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஓர் ஆடம்பர ஹோண்டா சிட்டி காரை பரிசாக அளித்திருக்கிறார். இதைப்போலவே முன்னர் எல்.கே.ஜி. படத்தை வெற்றிப்படமாக்கிய  இயக்குநர் பிரபுவுக்கும் கார் ஒன்றை ஐசரி கணேஷ் பரி...
ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

News
ரசிகர்களின் தேவையை சரிவர அறிந்து, அதற்கேற்ப இசை அமைத்து புகழின் உச்சியில் குறைந்த காலத்தில் வீற்று இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. அதிலும் குறிப்பாக இளைஞர்களை கவரும் வண்ணம் அவர் அமைக்கும் இசை அவரை இசை உலகின் நாயகனாகவே மாற்றி விடுகிறது. "கோமாளி" படத்தின் பாடல்கள் அவருடைய உற்சாகமூட்டும் இசைக்கென்றே எல்லோராலும் முணுமுணுக்க படுகிறது. இந்தப் படத்தின் பின்னணி இசை மிகவும் சவாலானது எனக் கூறும் ஆதி படத்தை பற்றியும் , படத்தில் உள்ள தனது இசையை பற்றியும் கூறுகிறார்.  "கோமாளி" படத்தின் பின்னணி இசை கோர்ப்பு  மிக மிக சவாலாக இருந்தது.  எல்லா உணர்ச்சிகளின் கலவையான படம் என்பதால் , குறிப்பிட்ட ஒரு பாணியை மட்டுமே கடைப்பிடிக்க முடியவில்லை..இயக்குனர் பிரதீப் என்னிடம் கதை சொன்ன வினாடியே இந்த சவால் எனக்கு புலப்பட்டது.90க்களில் பிறந்த எனக்கு அந்தக் காலக் கட்டத்தின் உணர்ச்சிகள் எனக்கு எளிதாகவே புரிந்தது. என...