Tuesday, December 10

பெண்களுக்கெதிரான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்”!

Loading

மிக அழகான முறையில் அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கெதிரான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் நடிகை காஜல் அகர்வால். பல வித பின்னணியில் பெண்களுக்கெதிராக இல்லங்களில் நிகழ்த்தப்படும் வன்முறையை கூறுவதாக அமைந்திருக்கும் இந்த வீடியோவை திரு TK உருவாக்கியுள்ளார்.

வீடியோ பாடலை இயக்கிய  இயக்குநர் திரு  TK இது குறித்து கூறியதாவது…

எங்கள் மொத்த குழு சார்பாக இப்பாடலின் தன்மையை  புரிந்துகொண்டு, எங்களை பாராட்டி, வெளியிட்டமைக்கு நடிகை காஜல் அகர்வால் அவர்களுக்கு நன்றி. இப்பாடலை வெளியிட சரியானவர் அவர் என்பது எங்கள் மொத்த குழுவின் கருத்து. சினிமாவிலும் சரி, இயல்பு வாழ்க்கையிலும் சரி, பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக, எப்போதும் குரல் கொடுத்து வருபவர் அவர். அவர் எங்கள் பாடலை வெளியிட்டது எங்கள் அனைவருக்கும் பெருமை.

சிங்கப்பூரை சார்ந்த one clan நிறுவனத்தார் இந்த மியூசிகல் வீடியோவை  தயாரித்துள்ளார்கள். திரு TK, தர்மேனிசம் இணைந்து இப்பாடலை உருவாக்கி, பாடியுள்ளார்கள். ( Diyo )தியோ இசையமைக்க  ராப்பர்ஸ் – சோக்கோ (choco), B மற்றும் ஸ்பைஸ் ( spice ) பாடலுக்கு வலிமை கூட்டியுள்ளார்கள்.

இந்த ஐந்து நிமிட பாடல் வீடியோவை இயக்கியுள்ளார் திரு TK. லெவின் ஒளிப்பதிவு  செய்ய படத்தொகுப்பு JK சரவணா, குட்டி குமார் மற்றும் சிதம்பரம் S செய்துள்ளனர். JK சரவணா மற்றும் அவரது Tantra Studios இணைந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளை செய்துள்ளார்கள்.

சமூகத்திற்கு தேவையான அழுத்தமான கருத்தை சொல்லும்
இந்த வீடியோவிற்கு Wish a Smile Foundation மற்றும் #IKilledSucide Movement ஆதரவளித்துள்ளார்கள்.