‘கபடதாரி’ – விமர்சனம்
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் புதையல், அதைத் தொடர்ந்து நடக்கும் கொலை என்று விறுவிறுப்பாகத் தொடங்கும் கபடதாரி இறுதிவரை அந்த விறுவிறுப்பு குறையா வண்ணம் உருவாக்கப்பட்டதற்காக முதலில் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியைப் பாராட்ட வேண்டும்.
போக்குவரத்து காவலராக இருக்கும் சிபிராஜுக்கு குற்றப் பிரிவு காவலராகப் பணியாற்ற வேண்டும் என்பது ஆசை. எனவே புதையல் தொடர்பாக நடந்த இந்தக் கொலைகளின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முற்படுகிறார். அவருக்கு உதவ புலனாய்வு பத்திரிகை ஆசிரியர் ஜெயபிரகாஷ் முன் வருகிறார்.
இந்த கொலைகள் நடந்த சமயத்தில் இவற்றை விசாரித்த காவல்துறை அதிகாரி நாசர் ஆரம்பத்தில் சிபிராஜூக்கு உதவ மறுத்தாலும் பின்னர் மனம் மாறி முக்கிய தகவல்களைத் தருவதுடன் உடனிருந்தும் உதவுகிறார்.
இந்தக் கொலைகள் தொடர்பாக சாட்சியம் அளித்தவர்களில் ஒருவர் சொ...
