கர _ விமர்சனம்
கர _ விமர்சனம்
விவசாயிகள் நிலத்தின் மீது பெற்ற கடன் வட்டி, அபராத வட்டி, இத்யாதி என்று வளர்ந்து அவர்களை மூழ்கடிக்கும் நிலையை ஆழமாக விவரிக்கும் படம் 'கர என்று சுருக்கமாக ஒரே வரியில் படத்தை விமர்சித்து அதற்கு மகுடம் சூட்டலாம்.
இயக்குநர் விக்னேஷ் ராஜா - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள 'கர', வெறும் திருடன்-போலீஸ் ஆட்டம் மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு அழுத்தமான அரசியல் பேசும் படம்.
தன்னிடமுள்ள 'திருடன்' என்ற கரையைத் துடைக்கப் போராடும் கரசாமி, தன் ஊரையும் குடும்பத்தையும் சூழ்ந்துள்ள கடன் எனும் கரையைத் துடைக்க மீண்டும் திருட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறான். வளைகுடா நாட்டுப் போர் எப்படி இங்கே ஒரு சாதாரண விவசாயியின் டிராக்டர் கடனைப் பாதிக்கிறது என்ற உலகளாவிய அரசியலை, உள்ளூர் த்ரில்லர் பாணியில் கோர்த்த விதம் இயக்குநரின் புத்திசாலித்தனம்.
படத்தின் அச்சாணியே தனுஷ்தான். வசனங்களை விட மௌ...
