Tuesday, September 22

Tag: Karuppu review

கருப்பு _ விமர்சனம்

Reviews
கருப்பு _ விமர்சனம் நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் அநீதிகளை அச்சமின்ற தோலுரித்துக் காட்டும் அட்டகாசமான படம் கருப்பு. ஆதிக்கம் மிக்க மனித சக்திகளால் நடைபெறும் அக்கிரமங்களை தட்டிக்கேட்க, எளியோர்களின் சாமியான கருப்பு மனித உருவில் வந்து நின்றால் எப்படி இருக்கும் என்கிற ஃபேண்டஸி + அதிரடி மசாலாதான் கருப்பு! கேரளாவிலிருந்து சென்னைக்குத் தன் மகள் பினுவின் அறுவை சிகிச்சைக்காக, வருகிறார் தந்தை இந்திரன்ஸ். ஆனால், சென்னை நகரம் அவர்களுக்குப் புதியது என்பதால் வழி தெரியாமல் தவித்து, துரதிர்ஷ்டவசமாக சில சமூக விரோதிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள். மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த நகைகள் அனைத்தையும்  திருடர்கள் பறித்துச் செல்ல, செய்வதறியாது திகைக்கும் அந்தத் தந்தை, நியாயம் கேட்டு காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைகிறார். அங்குதான் கதையின் முக்கியத் திருப்பம் ஏற்படுகிறது. அநீதிக்குத் ...