எல்.ஐ.கே (LIK): விமர்சனம்
எல்.ஐ.கே (LIK): விமர்சனம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே), எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு 'பியூச்சரிஸ்டிக் ரொமாண்டிக் காமெடி' திரைப்படம். 2040-ம் ஆண்டில் தொழில்நுட்பம் மனித உறவுகளை எப்படி ஆக்கிரமிக்கும் என்பதை கற்பனை கலந்து, அதே சமயம் ஜாலியான திரைக்கதையோடு சொல்லியிருக்கும் ஒரு கலர்ஃபுல் சினிமா இது.
2040-ம் ஆண்டு, அலைப்பேசி மற்றும் சமூக வலைதளங்கள் இல்லாத ஒரு 'பசுமை உலகத்தை' உருவாக்கி, அங்குத் தனது மகன் வைப் வாசேவுடன் (பிரதீப் ரங்கநாதன்) வசிக்கிறார் தந்தை அன்புகடல் (சீமான்). செல்போன் மோகத்தில் இருந்து சமூகத்தை மீட்பதே இவர்களின் நோக்கம். ஆனால், வைப் வாசேவுக்கு சமூக வலைதளங்களில் புகழ்பெறத் துடிக்கும் தீமா (கீர்த்தி ஷெட்டி) மீது காதல் மலர்கிறது. இவர்களது காதலுக்கு வில்லனாக உருவெடுக்கிறது சூரியன் (எஸ்.ஜே.சூர்யா) ...
