லோகா சாப்டர் 1: சந்திரா _ விமர்சனம்
லோகா சாப்டர் 1: சந்திரா _ விமர்சனம்
செவி வழி சொல்லப்படும் நாட்டுப்புறக் கதை ஒன்றை, நவீன காலத்துக்கு கொண்டு வந்து அட்டகாசமான தொழில்நுட்ப நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான் 'லோகா'.
பெங்களூருவில் தன் நண்பர்களுடன் வசிக்கிறார் நஸ்லன்.
அவரது வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் குடி வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
அவருடன் பழக ஆசைப்படும் நஸ்லன், நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைப்பு விடுக்க, கல்யாணியும் அதை ஏற்றுக் கொண்டு பார்ட்டிக்கு வருகிறார்.
அந்தப் பார்ட்டியில் போதைப் பொருட்கள் புழங்குவதாகச் சொல்லி சோதனை நடத்துவதற்கு வருகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாண்டி (மாஸ்டர்).
நஸ்லன், கல்யாணி மற்றும் நண்பர்களுடன் இன்ஸ்பெக்டர் சாண்டிக்கு ஏற்படும் உரசல் பெரிதாகிக் கொண்டே போகிறது.
அதே சமயம் நஸ்லன் _கல்யாணி நட்பும் பலப்பட்டுக் கொண்டே வருகிறது.
கல்யாணியிடம் சில ஆச்சரியமான சக்த...
