லவ் ஓ லவ் _ விமர்சனம்
லவ் ஓ லவ் _ விமர்சனம்
எத்தனையோ காதல் கதைப் படங்கள் வந்திருந்தாலும் லவ் ஓ லவ் முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையை சொல்லுகிறது.
படத்தில் டைட்டில் கார்டு போடப்படும்போதே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விடுகிறது இந்தப் படம். அந்த எதிர்பார்ப்புகளுக்கு குறைகள் எதுவும் இல்லை ஆனால் கலகலப்பான காதல் கதையாக திரையில் மலர்கிறது லவ் ஓ லவ்.
எங்கள் சொந்த பணத்தைத்தான் செலவு செய்திருக்கிறோம் என்ற வசனம் வரும்போது தயாரிப்பாளர் பெயர் திரையில் தோன்றுகிறது
"நீ கதையை மாற்றி மாற்றி தான் சொல்லுவாயா... நேர்கோட்டில் சொல்ல மாட்டாயா? என்று வசனம் வரும்போது படத்தொகுப்பாளர் பெயர் திரையில் தோன்றுகிறது.
வாங்கும் சம்பளத்தை அப்படியே வீட்டில் கொடுத்துவிட்டு பொறுப்புள்ள பையனாக இருக்கும் இளைஞன் பவிஷ் நாகதுர்காவுடன் காதலில் விழுந்த பிறகு கதையே மாறுகிறது.
காதலிக்காக கடன் வாங்க ஆரம்பிக்கிறார். பைக் தவணை முறையில் வாங்குகிறார்....
