Monday, September 21

லவ் ஓ லவ் _ விமர்சனம்

Loading

லவ் ஓ லவ்  _ விமர்சனம்

எத்தனையோ காதல் கதைப் படங்கள் வந்திருந்தாலும் லவ் ஓ லவ்  முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையை சொல்லுகிறது.
படத்தில் டைட்டில் கார்டு போடப்படும்போதே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விடுகிறது இந்தப் படம். அந்த எதிர்பார்ப்புகளுக்கு குறைகள் எதுவும் இல்லை ஆனால் கலகலப்பான காதல் கதையாக திரையில் மலர்கிறது லவ் ஓ  லவ்.
எங்கள் சொந்த பணத்தைத்தான் செலவு செய்திருக்கிறோம் என்ற வசனம் வரும்போது தயாரிப்பாளர் பெயர் திரையில் தோன்றுகிறது
“நீ கதையை மாற்றி மாற்றி தான் சொல்லுவாயா… நேர்கோட்டில் சொல்ல மாட்டாயா? என்று வசனம் வரும்போது படத்தொகுப்பாளர் பெயர் திரையில் தோன்றுகிறது.
வாங்கும் சம்பளத்தை அப்படியே வீட்டில் கொடுத்துவிட்டு பொறுப்புள்ள பையனாக  இருக்கும் இளைஞன் பவிஷ் நாகதுர்காவுடன் காதலில் விழுந்த பிறகு கதையே மாறுகிறது.
காதலிக்காக கடன் வாங்க ஆரம்பிக்கிறார். பைக் தவணை முறையில் வாங்குகிறார்.இப்படி ஒவ்வொன்றாக காதலிக்காக செய்ய போய் கடைசியில் கடன் கழுத்தை நெறிக்கிறது.
விஷயம் போலீஸ் நிலையம்வரை செல்கிறது. இங்குதான் கதையின் ட்விஸ்ட்.
நான் காதலிக்காக செய்த எல்லாவற்றையும், அவள் இப்போது எனக்கு திரும்ப செய்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் பவிஷ். அப்போதுதான் காதலியை விட்டு விலக முடியும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் முரண்டு பிடிக்கிறார்.
காதலன் செய்ததை எல்லாம் காதலியால் திரும்ப செய்ய முடிகிறதா இல்லையா என்பதை நகைச்சுவையுடன் சொல்லுகிறார் இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன்.
” பிறந்தநாளுக்கு எனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் (!)  வாங்கிக் கொடு என்று காதலன் பவிஷிடம் கேட்கும் காதலி வேடத்தில் நாக துர்கா மிக அழகாக நடித்திருக்கிறார்.
படம் முழுவதும் இழையோடும் மெலிதான நகைச்சுவை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.
பி ஜி முத்தையாவின் வண்ணமயமான ஒளிப்பதிவு படத்தை இன்னொரு தளத்துக்கு உயர்த்துகிறது.
காதலர்கள் மட்டுமல்ல அனைவரும் திரையரங்குக்கு சென்று பார்த்து ரசிக்கத்தக்க கலகலப்பான திரைப்படம் லவ் ஓ லவ்.