மதராஸி_ விமர்சனம்
மதராஸி_ விமர்சனம்
'துப்பாக்கி' என்ற தலைப்பிலேயே ஒரு படத்தை உருவாக்கிய இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிப்பதற்காக உருவாக்கி இருக்கும் படம் தான் 'மதராசி'.
தமிழ்நாட்டில் விநியோகிப்பதற்காக ஆறு கண்டெய்னர் லாரிகளில் வட இந்தியாவில் இருந்து வரும் துப்பாக்கிகளை தடுத்து அழிக்க திட்டமிடுகிறார்கள் என் ஐ ஏ அதிகாரிகள்.
தற்கொலைக்கு பலமுறை முயற்சி செய்து தோல்வியடையும் சிவகார்த்திகேயனை இந்த திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள் அதிகாரிகள்.
சிறு வயதிலேயே தன் குடும்பத்தை இழந்த சிவகார்த்திகேயன், டெல்யூஷன் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
யாருக்காவது ஏதாவது ஆபத்து என்றால், தானாக முன்வந்து அவர்களைக் காப்பாற்றுவார் சிவகார்த்திகேயன்.
அவரது இந்த நோயைப் பற்றியும், குண இயல்பைப் பற்றியும் தெரிந்து கொண்ட ருக்மணி வசந்த் சிவகார்த்திகேயனை காதலிக்க தொடங்குகிற...
