மக்கள் தலைவா _ விமர்சனம்
மக்கள் தலைவா விமர்சனம்
கிராமத்தில் வேலை வெட்டி எதுவும் இல்லாமல், வாய்ச்சவடாலில் வாழ்க்கையை ஓட்டி வரும் ரவி மரியா, தன்னைப் பெற்றவர்களுக்கு பாரமாக இருந்தாலும் நண்பர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிகள் செய்பவராக இருக்கிறார்.
சமூக சேவை என்ற பெயரில் பொது பிரச்சனைகளில் களமிறங்கி பெரிய அளவில் காசு பணம் பார்ப்பது ரவி மரியா அண்ட் கோவின் வேலையாகவே இருக்கிறது.
பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான தொழிலதிபர் ராதா ரவி மூலம் ரவி மரியா வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிறது.
ஏராளமான பொருட் செலவில் ரவி மரியாவை கதாநாயகனாக வைத்து திரைப்படம் ஒன்று தயாரித்து வெற்றி பெற வைக்கும் ராதாரவி, அடுத்ததாக மரியாவை வைத்து புதிதாக கட்சி ஒன்றை ஆரம்பிக்கிறார்.
கட்சி அரசியல் அரங்கில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி ஆட்சியைப் பிடிக்கிறது இந்த புதிய கட்சி.
ராதாரவி யார் ?அவர் எதற்காக ரவி மரியாவை தேர்வு செய்து திர...
