மாஸ்க்_ விமர்சனம்
மாஸ்க்_ விமர்சனம்
கவின், ஆண்ட்ரியா நடிப்பில் விகர்ணன் அசோக் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'மாஸ்க்' திரைப்படம் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது என்று சுருக்கமாக ஒரே வரியில் விமர்சனம் செய்து விடலாம். டார்க் ஹியூமர் பாணியிலான இத்திரைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் நகைச்சுவை காட்சிகள், மிகப் பிரமாதமாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே "நான் கெட்டவன்தான்...ஆனால் எச்சை இல்லை..." என்று சொல்லும் கவின் நடித்த வேலு கதாபாத்திரத்தை இயக்குநர் செதுக்கியிருப்பதே பார்க்க புதிதாககவும் வித்தியாசமாகவும் உள்ளது.
அரசியல் கட்சித் தலைவரான மணிவண்ணன் (பவன்) எதிர் வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிப் பெற மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க சுமார் 440 கோடி பணத்தை பெண்களை வைத்து பாலியல் தொழிலை நடத்தி வரும் பூமி (ஆண்ட்ரியா) உதவியை நாடுகிறான்.
ப...
