காத்து வாக்குல ஒரு காதல் _ விமர்சனம்
காத்து வாக்குல ஒரு காதல் _ விமர்சனம்
வட சென்னை பகுதியில் உள்ள ரவுடி குழுக்கள் இடையே ஏற்படும் மோதலில் சிலர் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, நாயகன் மாஸ் ரவி மற்றும் நாயகி லட்சுமிபிரியா இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கின்றனர்.
ஒருவர் மீது ஒருவர் எந்த அளவுக்கு காதல் கொண்டிருக்கிறார்கள் என்பதை மாறி மாறி பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாஸ் ரவி காணாமல் போகிறார்.
அவரது மொபைல் எண்ணுக்கு லட்சுமி பிரியா போன் செய்தால் யாரோ போனை எடுத்து ராங் நம்பர் என்று சொல்கிறார்கள்.
தாங்கள் இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடங்களில் எல்லாம் காதலனை தேடி அலைகிறார் லஷ்மி பிரியா.
சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு நாள் சாலையில் காதலனை சந்திக்கிறார் காதலி...
எப்படி தெரியுமா? ஒரு ரவுடியாக...
அடிதடிகளில் இறங்கும் ஒரு கேங்ஸ்டர் ஆக மாறி இருக்கிறார் மாஸ் ரவி. அவரது இந்த மாற்றத்துக்கு...


