மை லார்ட் விமர்சனம்
மை லார்ட் _ விமர்சனம்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து சில திரைப்படங்களின் கதை அம்சங்கள் தொட்டுச் சென்றது உண்டு.
ஆனால் முதல் முறையாக இதில் உள்ள வணிகத்தையும், மனசாட்சியே இல்லாத அதிகாரம் மிக்கவர்களால் அப்பாவி ஏழைகள் அநியாயத்துக்கு ஏமாற்றப்படுவதையும் அப்பட்டமாக முகத்தில் அறைந்தாற்போல் சொல்லுகிறது 'மை லார்ட்'
திரைப்படம்.
மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஆஷா சரத்திற்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதால் உடனடியாக மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
இதற்காக கோவில்பட்டியில் வசித்து வரும் ஏழை தொழிலாளி சசிகுமார் குறிவைக்கப்படுகிறார்.
ரகசியமாக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆஷா சரத் தரப்பு ஆட்கள் செய்ய ஆரம்பிக்க, அதனால் ஏற்படும் தொடர் சிக்கல்கள்தான் இந்தப் படம்.
சசிகுமார் அறிமுகமாகும் போதே அவருக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்க, பிணவறையில் இ...
