நறுவீ _ விமர்சனம்
நறுவீ _ விமர்சனம்
நடிப்பு: ஹரிஷ் அலக் விஷ்ணு, வி ஜே பப்பு, பாடினி குமார், ஜீவாரவி, பிரவீனா, காத்தே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, சாரதா நந்தகோபால்
தயாரிப்பு: ஏ அழகு பாண்டியன்
இசை: அஸ்வத்
ஒளிப்பதிவு: ஆனந்த ராஜேந்திரன்
இயக்கம்: சுபராக் முபாரக்
பி ஆர் ஓ: ஆர் மணி மதன்
தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மலைப்பகுதியில் ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று குன்னூருக்கு வருகிறது.
இந்தப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகள், நல்ல கல்வியை பெற வேண்டும் என்பதற்காக தீரன் என்ற வசதியான இளைஞர் ஓராசிரியர் பள்ளியை சொந்தமாக நடத்தி வருகிறார்.
இந்தப் பள்ளியில் படிக்கும் ஓர் இளம் பெண்ணுக்கு மேற்கொண்டு தொடர்ந்த படிக்க வேண்டும் என்று அளவு கடந்த ஆசை.
ஆனால் நடைமுறையில் அது சிக்கலாக இருக்கிறது. ஆசிரியராக இருக்கும் தீரனே நல்ல வழிகாட்டியா...
