நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் ‘சொடக்கு’!
" சினிமாவை வித்தியாசமாக செய்ய நினைக்கிறவர்களுக்கு இது சரியான நேரம்.".சொடக்கு” டைரக்டர் காமராஜ் மனோன்மணி !!
தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும்
மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி பிலிம் புரொடக்ஷன்ஸ் கூட்டு முயற்சியில்,
அதிரடி திரில்லர் படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். மாஸ்டர்பீஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்திற்கு #சொடக்கு என்று பெயர் வைத்துள்ளார்கள்!
இதன் டைரக்டர் காமராஜ் மனோன்மணி கூறும் போது..
சினிமாவை வித்தியாசமாக செய்ய நினைக்கிறவர்களுக்கு இதுதான் சரியான நேரம். இந்த சமயத்தில் என்னுடைய 'சொடக்கு' படம் வருவது பெரிய பிளஸ். இது த்ரில்லர் படம்.
'சொடக்கு' டைட்டில் மாதிரியே தனி வித்தியாசம் காட்டும். எங்க படம் வீட்டுச் சாப்பாடு மாதிரி.
உடம்பை உற்சாகம் படுத்தும் . ருசிக்க ருசிக்க சுவை தரும்.
‘சொடக்கு’ போடுகிற நேரத்தில் ஒருவருடைய வாழ்க்கையே மாறும். அப்படி ஒரு நேரத்தில் ஒருவர் வாழ்க்கை...




