Tuesday, September 22

Tag: Neelira review

நீளிரா _ விமர்சனம்

நீளிரா _ விமர்சனம்

Reviews
நீளிரா _ விமர்சனம் நீளிரா என்றால் நீண்ட இரவு எனப் பொருள். எண்பதுகளின் இறுதியில் வட இலங்கையின் போர் சூழலில் நடக்கும் கதை இது. தமிழ் குடும்பம் ஒன்றில் சித்து குமரேசன் திருமணம் நடக்கவிருக்கிறது. அமைதியை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரில் இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை,  அங்குள்ள போராளிகளை ஒடுக்க முற்படுகிறது. போராளிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் அதை தடுக்கும் முயற்சியில் மூன்று அமைதிப்படை குழுக்கள் குறிப்பிட்ட இடத்துக்கு செல்கின்றன. அதில் ஒரு குழு தவறான பாதையில் சென்று, திருமணம் நடக்கவிருக்கும் தமிழ் குடும்பத்தினர் வீட்டிற்குள் நுழைந்து விடுகின்றனர். கல்யாண வீடாக களை கட்டி இருந்த அந்த இல்லம் சிறுக சிறுக இன்னல்களை எதிர்கொள்ள தொடங்குகிறது. அமைதிப்படை அங்கு நுழைந்து விட்டதை அறிந்த போராளிகள் தமிழ் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு களம் இறங்குகின்றனர்....