நிவின் பாலியின் 50ஆவது பட மாக உருவாகும் ‘விஜயம்’
'நேரம்', 'பிரேமம்' படங்களைத் தொடர்ந்து 'விஜயம்' – நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியானது!
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளாக்பஸ்டர் கூட்டணியான நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் தங்களின் புதிய படத்திற்காக மீண்டும் கைகோர்த்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு 'விஜயம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'நேரம்', 'பிரேமம்' ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி தங்களின் அடுத்த வெற்றிப் படைப்பிற்காக மீண்டும் இணைந்துள்ளது.
நடிகர் நிவின் பாலியின் திரையுலகப் பயணத்தில் மைல்கல்லாக அமையும் 50-ஆவது திரைப்படமாக 'விஜயம்' உருவாகிறது. இதன் தலைப்பு மற்றும் அறிமுக வீடியோ, எர்ணாகுளத்தில் உள்ள பத்மா திரையரங்கில், ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ...



