நிழற்குடை _ விமர்சனம்
நிழற்குடை _ விமர்சனம்
கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பே சிதைந்து வரும் நிலையில், பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் பணி செய்யும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளின் வளர்ப்பில் உள்ள சிக்கல்களை அழுத்தமாக பதிவு செய்கிறது நிழற்குடை.
ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் தன் குழந்தை மற்றும் குடும்பத்தை பறிகொடுத்த தேவயானி, தமிழ்நாடு வந்து முதியோர் இல்லம் ஒன்றில் பணி செய்கிறார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் விஜித் மற்றும் கண்மணி தம்பதியருக்கு எப்படியாவது அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கனவு.
இத்தம்பதியினர் தங்கள் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாட முதியோர் இல்லம் வருகின்றனர்.
அப்போது தேவயானியின் அன்பான அணுகுமுறைகளை கண்டு தங்கள் குழந்தையை பார்த்துக் கொள்ள அவரை தங்கள் இல்லத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.
தான் பெற்ற குழந்தையைப் போல் கண்ணும் கருத்த...
