Friday, September 11

Tag: Others review

அதர்ஸ் _ விமர்சனம்

அதர்ஸ் _ விமர்சனம்

Reviews
சில படங்களில் தலைப்புக்கும், படத்தின் உள்ளடக்கத்திற்கும் சற்றும் தொடர்பு இருக்காது. ஆனால் மிகச் சில படங்கள் கதையுடன் அற்புதமாக பொருந்தி போகும். இந்த இரண்டாம் வகைப் படம்தான் அதர்ஸ். ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் நள்ளிரவில் வரும் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகிறது. அதில் இருந்தவர்கள் மூன்று பெண்களும் ஒரு ஆணும் தீயில் எரிந்து மரணமடைகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி ஆதித்ய மாதவன் வருகிறார். விசாரணையின் போது ஒவ்வொரு முடிச்சும் அவிழ அவிழ குற்றவாளியை நெருங்க வேண்டிய போலீசாருக்கு, குற்றவாளியுடன் ஏற்படும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு விசாரணையும் முட்டு சந்தில் முடிவதாக அதிகாரி ஆதித்ய மாதவனே ஆதங்கப்பட்டுக் கொள்கிறார். இது ஒரு புறம் இருக்க, மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் செயற்கை முறை கருத்தரிப்பில் ஏற்படும் மிகக் கொடுமையான குற்றத்தை அங்கு பணியாற்றும...