Wednesday, September 23

Tag: pa.ranjith

வித்தியாசமான கதைக்கருவில் பா.இரஞ்சித் இயக்கிய “நட்சத்திரம் நகர்கிறது”!

வித்தியாசமான கதைக்கருவில் பா.இரஞ்சித் இயக்கிய “நட்சத்திரம் நகர்கிறது”!

News
பா.இரஞ்சித் இயக்கிய "நட்சத்திரம் நகர்கிறது" ஆகஸ்ட் 31 ம் தேதி வெளியாகிறது! இயக்குனர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு 'நட்சத்திரம் நகர்கிறது " எனும் படத்தை இயக்கியிருந்தார். காளிதாஸ் ஜெயராம், கலையரசன் துஷாரா, ஹரி, ஷபீர் , வினோத், மைம்கோபி உள்ளிட்டவர்களோடு புதுமுகங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். வித்தியாசமான கதைக்கருவில் உருவாகியிருந்த படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியிருக்கிறது. ஆகஸ்ட் 31 தியேட்டரில் வெளியாகவிருக்கிறது. யாழிபிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன், மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு கிஷோர்குமார், இசை டென்மா, எடிட்டிங் செல்வா RK, கலை ரகு, நடனம் சாண்டி, சண்டைப்பயிற்சி ஸ்டன்னர் சாம்....
கருத்தியல் அம்சம் கொண்ட சுயாதீனத் திரைப்படங்களை எடுக்க விரும்பும் இயக்குநர்கள் நீலம் புரொடெக்சனை அணுகலாம்!

கருத்தியல் அம்சம் கொண்ட சுயாதீனத் திரைப்படங்களை எடுக்க விரும்பும் இயக்குநர்கள் நீலம் புரொடெக்சனை அணுகலாம்!

News
  நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் தான் பேசும் போது, தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மிக்க நன்றி. சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா..? என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை. அந்தக் கதையை படித்த போது இது ஒரு ஃப்யூச்சர் ப்லிம்மாக இருக்குமா..? என்கின்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. என்னோட சந்தேகத்தை நான் இப்படத்தின் இயக்குநர் தமிழிடமும் கேட்டேன். ஆனாலும் இந்தக் கதை என்னை வெகுவாக பாதித்தது என்பது மறுக்க முடியாத உண...
கேன்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்!

கேன்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்!

News
  கேன்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்! கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது. கலைத்துறையில் குறிப்பாக சினிமாத்துறையில் இலாப நோக்கோடு மட்டுமே இயக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் இங்கு பேசவேண்டிய, காட்சிப்படுத்தவேண்டிய, மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மனித வாழ்வின் பக்கங்களை படம்பிடித்து காட்டும் ஒரு நிறுவனமாக நீலம் புரொடக்சன்ஸ் இயக்குனர் பா.இரஞ்சித்தால் ஆரம்பிக்கப்பட்டது. பரியேறும்பெருமாள் படத்திலிருந்து துவங்கப்பட்ட இந்த பயணம் இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டாபரம்பரை, என தனித்துவமிக்க படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறது. அடுத்து சேத்துமான், ஜெ.பேபி, பொம்மை நாயகி, நட்சத்திரம் நகர்கிறது, என அடுத்தடுத்த படங்கள் வெளிய...
பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் திரைப்படவிழா!

பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் திரைப்படவிழா!

News
பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் திரைப்படவிழா சென்னையில் இன்று துவக்கம்! இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, பி.கே ரோசி திரைப்படவிழா சென்னையில் இன்று துவங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த திரைப்படவிழா 9, 10,11ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதன் துவக்கவிழா சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் துவங்கப்பட்டது , துவக்கவிழாவில் பேசிய பா.இரஞ்சித் இந்திய சினிமாவில் பல்லாயிரங்கணக்கான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக மக்களிடையே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சினிமா படங்கள் மக்களில் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. சினிமாவில் பயன்படுத்தப்படும் மொழியும், வாழ்வியலும், ஆவணமாகின்றன. கலாச்சாரத்தையும், வாழ்வியலையும் அடுத்த தலைமுறைக்கு எளிதாக கொண்டுசெல்லும் வலிமை சினிமாவுக்கு உண்டு. அப்படிப்பட்ட சினிமா இங்கு என்னவாக இயங்கிக்கொண்டிருக்கிற...
மதுரையில் பிரமாண்டமாக துவங்கிய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி!

மதுரையில் பிரமாண்டமாக துவங்கிய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி!

News
"கவனிக்கப்படாத கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பதே மார்கழியில் மக்களிசையின் நோக்கம்" - பா.இரஞ்சித்! ‘மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான்’ எனத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ”மார்கழியில் மக்களிசை பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு இன்று மதுரையிலும், நாளை கோவையில் நடத்துகிறோம், மேலும் வரும் 24 முதல் 31 ஆம் தேதி வரை 7 நாட்கள் தொ...
சீயான் விக்ரமுடன் இணையும் பா.இரஞ்சித்!

சீயான் விக்ரமுடன் இணையும் பா.இரஞ்சித்!

News
சீயான் விக்ரமுடன் இணையும் பா.இரஞ்சித்! அட்டகத்தி', 'மெட்ராஸ்' திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'கபாலி', 'காலா' ஆகியப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் டைரக்டர் பா. ரஞ்சித். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தற்போது காளிதாஸ் , துஷாரா, கலையரசன் , ஹரி நடிப்பில் 'நட்சத்திரம் நகர்கிறது' என்கிற படத்தை இயக்கிவருகிறார். இறுதிக்கட்டபடப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இன்னிலையில் சீயான் விக்ரமுடன் இணைந்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் தொழில் நுட்பகலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் ....
“கலைகள் வழியாக பிரச்னைகளை பேசுவதே மக்களை சென்றடையும்” – பா.இரஞ்சித்

“கலைகள் வழியாக பிரச்னைகளை பேசுவதே மக்களை சென்றடையும்” – பா.இரஞ்சித்

News
கலைகள் வழியாக மக்களின் பிரச்சனைகளை பேசுவதே அது மக்களை சென்றடையும் எளிதான வழி. பா.இரஞ்சித். கேரளாவில் நடைபெற்ற ஆராய்ச்சி மாணவர்கள் சார்பில் நடை பெற்ற கூட்டத்தில் இயக்குனர் பா. இரஞ்சித் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். இந்தியா முழுமைக்கும் தலித்துகளின் நிலமை இன்றுவரை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. குறிப்பாக நிலமற்ற தலித்துகள் இந்தியா முழுமையும் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள். முற்போக்கு மாநிலமான கேரளாவிலும் தலித்துகளும், மீனவர்களும், ஆதிவாசிகளும் இன்றும் நிலமற்றவர்களாக வாழ்ந்து வருவதை நாம் கேள்விக்கு உட்படுத்தவேண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் இன்றைக்கு ஆய்வு செய்து இங்கு சமர்ப்பித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் இன்று இதை குறித்த விவாதம் நடைபெருவது வரவேற்ப்புகுறியது. இது குறித்த புரிதலை ஆதிவாசி மக்கள் , மீனவர்கள் , தலித் மக்களுக்கு மாணவர்களின் இந்த ஆய்வுக்கட்டுர...
இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்த ‘மார்கழியில் மக்களிசை’!

இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்த ‘மார்கழியில் மக்களிசை’!

News
மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பா. இரஞ்சித்துக்கு வாழ்த்துகள்-பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங்! ”மார்கழியில் மக்களிசை 2020” நிகழ்ச்சியின் 2-ஆம் நாளான நேற்று(25/12/2020), சிறப்பு விருந்தினாராக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு இசை கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று முன்தினம் தொடங்கியது தொடங்கியது. தொடர்ந்து 8...
பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் பட்டியலில் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி!

பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் பட்டியலில் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி!

News
பிபிசி 100 பெண்கள்’ என்ற பெயரில் சவால்களை தகர்த்தெறியும் 100 பெண்களின் பட்டியலை கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து பிபிசி வெளியிட்டு வருகிறது. இதில், உலகளவில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டு தன்னை மட்டுமல்லாது தன்னை சார்ந்த சமூகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில் பிபிசி செய்தி நிறுவனம், ஆண்டுதோறும் சிறந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண்கள் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. அதில் இயாக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவான கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் பாடகி இசைவாணி இடம்பெற்றிருக்கிறார். சென்னையை சார்ந்த இசைவாணி கேஸ்ட்லெஸ் கலைக்குழுவின் முக்கியமான பாடகி, கானா பாடல்கள் மூலம் பலரின் பாராட்டுக்களைப்பெற்றவர். கானா பாடல்கள் என்றால் ஆண்கள் மட்டுமே பாடுகிறவர்கள் என்பதை உடைத்து அந்தத்...