ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் ‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi)
'பள்ளிச்சட்டம்பி' (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது*
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் 'குயின் - (Queen) படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான 'ஜன கன மன' ( Jana Gana Mana) படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு 'மலையாளி ஃபிரம் இந்தியா' ( Malayalee From India) எனும் திரைப்படத்தையும் இயக்கினார். அழுத்தமான சமூகம் சார்ந்த கருத்துக்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்தார். அத்துடன் இயக்குநர் டிஜோ - சமகால மல...
