பரிசு _ விமர்சனம்
பரிசு _ விமர்சனம்
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஆடுகளம் நரேனின் மகள் ஜான்விகா தந்தையைப் போலவே நாட்டுப் பற்று மிக்கவராகவும், ராணுவத்தில் சேர்ந்து தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர் ஆகவும் இருக்கிறார்.
இதற்காக தந்தையின் உதவியுடன் துப்பாக்கிச் சூடும் பயிற்சியில் இருந்து அனைத்து வகை பயிற்சிகளையும் பெற்று அதற்கு தகுதியானவராகவும் தன்னை உருவாக்கிக் கொள்கிறார்.
கல்லூரியில் படிக்கும் ஜான்விகாவுக்கு உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் காதல் வலை விரிக்க, அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறார் ஜான்விகா.
வேளாண்மையில் ஈடுபாடு கொண்ட ஜான்விகாவை லேடி நம்மாழ்வார் என்று அவரது தோழிகளும் செல்லமாக கிண்டல் செய்வது உண்டு.
ஒரு நாள் கார் ஒன்றின் மீது லாரி மோதி விட்டு செல்லும் 'ஹிட் அண்ட் ரன்' சம்பவத்தை நேரில் பார்க்கும் ஜான்விகா, அடிபட்டு காரில் இருந்தவரை காப்பாற்றுகிறார்.
அத்துடன் விபத்த...

