Tuesday, September 1

Tag: Parthiban Radhakrishnan

முதல்வரை சந்தித்த பார்த்திபன்!

முதல்வரை சந்தித்த பார்த்திபன்!

News
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! சினிமா ஒரு சொகுசு சொர்க்கபுரி. சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர் சட்டென மாறிய வானிலைப் போல CM நாற்காலியில் அமர்ந்ததுமே தன்னை மிகுந்த பொறுப்புள்ளவராக பொருத்திக் கொள்வது சாத்தியமா? சத்தியமாய் சந்தேகம் மேலெழும். சினிமாவிலிருந்து சென்றவர் என்பதால் ஒரு செல்ல ப்ரியம் கலந்த கர்வத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் சந்தித்தேன் நம் மாண்புமிகு விஜய் அவர்களை. புகைப்படம் எடுக்கையில் தோளின் மீது கை வைக்கையில் “ கை போட்டுக்கலாமா?”என்றார் பணிவாக. “சார்ர்ர்! என்ன சார் நானில்லை உங்ககிட்ட கேட்கனும்” என்றேன் “போடுங்க” என்று அவரே என் கையை இழுத்து போட்டுக் கொண்டார். திரையை விலக்கி நான் காட்டிய photo frame-ஐ பார்த்து “இப்படி ஏதாவது வருமென எதிர்...

மக்கள் வெற்றி பெற யாருக்கு ஓட்டளிப்பது?

News
இந்த சட்டமன்றத் தேர்தலை ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போலவே பார்க்கிறேன் அதுவும் 3 காட்சிகள் மட்டுமல்ல, எல்லாக் காட்சிகளையும் நான் மட்டுமல்ல எல்லா மக்களும் houseful ஆக street full ஆக road full ஆகப் பார்க்கிறார்கள் அப்படி full ஆகப் பார்க்கும் மக்களை FOOL ஆகப் பார்க்கும் அல்லது Fool ஆக்கப் பார்க்கும் அரசியல்வாதிகள் இத்திரைப்படத்தை action, comedy, thriller, suspense, horror, fiction இப்படி எல்லாம் கலந்த genre-ல் அவியல் கூட்டணி entertainment ஆகத் தருகிறார்கள். என்னைப் போன்ற நடுநிலைவாதிகள் சுவாரஸ்யமாக ஆனால் கவலையுடன் பார்க்கிறோம். மொய் விருந்துப் போல பொய் விருந்து படைக்கப்படுகிறது , அதன் மீது மொய்க்கும் ஈக்களாக மக்கள் மெய்யாகவே ஈர்க்கப்படுகிறார்களா? அல்லது மக்களும் அரசியல்வாதிகளை ஏமாற்றப் பார்க்கிறார்களா? என்பதை பொறுத்திருந்தேப் பார்க்கவேண்டும். நாளைய நாட்டை ஆளப்போவது தலைவர்கள் அல்ல, இன்றைய ...
எழில் இயக்கத்தில் பார்த்திபன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்!

எழில் இயக்கத்தில் பார்த்திபன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்!

News, Uncategorized
பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சம் வைக்காத, வெற்றியை சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் S. எழில் இயக்கத்தில் இரு தலைமுறைகளை சேர்ந்த மிக முக்கிய நடிகர்களான பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம் கார்த்திக் இணைந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள். தற்போதைய நிலையில் “புரடக்‌ஷன் நம்பர் 2” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் D. விஜய்குமரன் தயாரிக்கிறார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, இயக்குநர் S.எழில், வசனகர்த்தா C.முருகேஷ் பாபு மற்றும் ஒளிப்பதிவாளர் குருதேவ் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் நவம்பர் 19, 2020 அன்று இப்படம் துவங்கப்பட்டது. படம் குறித்து காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D. விஜய்குமரன் கூறியதாவது.... படத்தின் நட்சத்திர நடிகர்கள் குழுவே படம் ஒரு மிக அழுத்தமான கா...