பெத்தி _ விமர்சனம்
பெத்தி _ விமர்சனம
’ராம் சரணின் மிரட்டல் பிளாக்பஸ்டர் என்று பத்து படத்தை ஒரே வரியில் சுருக்கமாக விமர்சனம் செய்து விடலாம்.
புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் - ஜான்வி கபூர் கூட்டணியில் உருவான 'பெத்தி' தியேட்டர்களை அதிரவைக்கும் அட்டகாசமான படமாக தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
லப்பர் பந்து படத்தின் கிரிக்கெட் எமோஷனையும், பைசன் படத்தின் குஸ்தி ஆக்ஷனையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்த ஒரு வெறித்தனமான அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது!
படத்தின் மெயின் ஸ்டோரி:
விஜயநகரம் தாண்டிய ஒரு மலைக்கிராமம். அங்கே 1800-க்கும் மேற்பட்ட மக்கள் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் வாழ்கிறார்கள். கண் முன்னாடி ரயில் போனாலும், அந்த ஊரில் நிற்காது. கிலோமீட்டர் கணக்கில் நடந்தே செல்லும் அவலம். இந்த ஊரில் பிறந்து, கூலி கொடுத்தால் யாருக்காகவும் மேட்ச் ஆடக்கூடிய ஒரு 'ஆட்டக்கூலி' தான் நம்ம பெத்தி (ராம் சரண்).
...
