விருதுகளுக்கு பார்த்திபன் பாணியில் மகிழ்ச்சியும் நன்றியும்!
பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்!*
உடுக்கை இழந்தவன்
கைபோல ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம்!
வேட்டிக் கழண்டாதான் மானம் போகனும்னு அவசியமில்லே…. ஒரு கலைஞனுக்கு அந்த வருஷத்தில படமே வரலேன்னாலும்,வந்த படம் சரியாப் போகலைன்னாலும், உரிய அங்கீகாரம் கிடைக்கலைன்னாலும் மானம் மட்டுமில்லே ஒட்டிகிட்டே மரியாதையும் கூடவே போயிடும்.
20 மாசமா மனசு கர்ப்பமாவே இருக்கு, என் இயக்கப் படம் வரலைங்கிற பாரத்தோட… இந்த அறிவிப்பு மானம் போகாம இடுக்கண் களைந்த நட்பாய் கண்களில் நீர் கோர்த்த பரவசத்தோட, சுவாசத்தை சுவாரஸ்யமா மாத்தியிருக்கு,நம்பிக்கை தசையை ஏத்தியிருக்கு, தித்திப்பை திசையெங்கும் கூட்டியிருக்கு. நன்றி சொல்ல நா வரண்டுப் போனதால , எழுதி சமாளிக்க ஏதுவான வார்த்தையை வானத்தில கண்கள் தேடிகிட்டிருக்கு.
விருது பெற்ற அனைவருக்கும் என் மனமொத்தத்தையும் ஒரு பூப்பந்தாக்கி வாழ்த்துக்கள். முந்தாநாள் பொறந்து வந...







