ரெட்ட தல _ விமர்சனம்
ரெட்ட தல _ விமர்சனம்
ஆதரவற்ற நிலையில் இருக்கும் சிறுவர்கள் அருண் விஜய் மற்றும் சித்தி இத்தானி இருவரும் நட்புடன் பழகுகின்றனர்.
வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் அருண் விஜய், சித்தி இதானியை மணந்து கொள்ளும் திட்டத்துடன் வந்து அவரை சந்திக்கிறார்.
ஆனால் பணத்தாசை பிடித்த சித்தி இத்தானியோ அருண் விஜய் காதலை ஏற்காமல் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆக விரும்புகிறார்.
இந்த சூழலில் தன்னைப் போலவே இருக்கும் பெரும் செல்வந்தர் ஒருவரை அருண் விஜய் சந்திக்கிறார்.
"அவரைக் கொன்று விட்டு அந்த இடத்துக்கு நீ சென்று விட்டால் நாம் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்"என்று அருண் விஜயை தூண்டி விடுகிறார் சித்தி இத்தானி.
இதற்கு ஒத்துக்கொள்ளும் அருண் விஜய் அந்த செல்வந்தரை கொன்று விடுகிறார்.
அந்த செல்வந்தர் கோவாவில் உள்ள மிகப் பெரிய நிழல் உலக தாதா என்றும், அவரைக் கொல்வதற்கு மற்றொரு கும்பல் திட்டம் தீட்...
