Tuesday, September 22

Tag: Revalvar reeta review

ரிவால்வர் ரீட்டா_ விமர்சனம்

ரிவால்வர் ரீட்டா_ விமர்சனம்

Reviews
ரிவால்வர் ரீட்டா_ விமர்சனம் ஊரையே நடுநடுங்க வைக்கும் மிகப்பெரிய ரவுடி சூப்பர் சுப்பராயனை, முன் பகை காரணமாக ஆந்திராவில் உள்ள ரவுடி அஜய் கோஷ் திட்டமிட்டு அதற்காக கூலிக்கு கொலை செய்யும் கல்யாண் மாஸ்டரை ஏற்பாடு செய்கிறார். ஒரு நாள் பெண் சுகம் தேடி சென்ற சூப்பர் சுப்பராயன் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். நிறை போதையில் நிற்கும் சூப்பர் சுப்பராயன், கீர்த்தி சுரேஷின் தாயார் ராதிகாவால் தாக்கப்பட்டு இறந்து போகிறார். சூப்பர் சுப்பராயன் இறந்ததை தெரிந்து கொண்ட ஒரு குழு பிணத்தைக் கைப்பற்றி அஜய் கோஷிடம் பணம் பெற துடிக்கிறது. வீட்டில் கிடக்கும் பிணத்தை அப்புறப்படுத்த கீர்த்தி சுரேஷ் தன் தாயார் ராதிகா மற்றும் இரு சகோதரிகளுடன் முயற்சி செய்கிறார். இதற்காகவே ஒரு காரை வாங்கி பிணத்தை ஆள் அரவமற்ற மறைவான இடத்தில் கொண்டு போய் போட்டு விட திட்டமிடுகின்றனர். இதற்கிடையில்...