திரெளபதி 2’ வெறும் வரலாற்று படம் அல்ல!
“’திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! நம் முன்னோர்களின் போர்க்குரலை மீண்டும் உயிர்பிப்பது” – நடிகர் ரிச்சர்ட் ரிஷி!
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நடிகராக வலம் வரும் ரிச்சர்ட் ரிஷி, சவாலான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தற்போது, வரலாற்றுப் படமான ‘திரௌபதி 2’ மூலம் இதுவரை காணாத வீரத் தோற்றத்தில் ரசிகர்களை திரையில் சந்திக்க உள்ளார். ஜனவரி 23 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ’திரெளபதி 2’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்தான அனுபவங்களை ரிச்சர்ட் ரிஷி பகிர்ந்து கொண்டார்.
“’திரௌபதி 2’ படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயனாக நடித்திருப்பது என் வாழ்க்கையின் முக்க...






