ராயல் சல்யூட் சினிமா விமர்சனம்
ராயல் சல்யூட் சினிமா விமர்சனம்
இந்திய ராணுவ வீரன் சக்திவேல் (பிரதீப்) இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரில் குண்டடிபட்டு உயிருக்குப் போராடும் தனது உயரதிகாரியை காப்பாற்றுவதற்கான முயற்சியில் இருக்கிறான். அந்த நேரத்தில் அவனது உயிருக்கு ஆபத்து உருவாக, அப்போதைய போரில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான் வீரன் ஒருவன் சக்திவேலின் உயிரைக் காப்பாற்றுகிறான். அடுத்த சில மணி நேரத்திலேயே சக்திவேலுக்கு தன்னைக் காப்பாற்றியவனை கொல்ல வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அந்த நிலைமையில் அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பது படத்தின் உணர்வுபூர்வமான நிறைவுக் காட்சி.
தனது உயரதிகாரியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை முதுகில் தூக்கிச் சுமந்து பல கிலோ மீட்டர் துரம் நடப்பது, உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிக்கித் தவிப்பது, ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய பாகிஸ்தான் நாட்டு இந்திய ராணுவ வீரனை சுட்டுக் கொல...
