சக்தித் திருமகன் _ விமர்சனம்
சக்தித் திருமகன் _ விமர்சனம்
மிகச் சாதாரண ஆளாக இருந்து அரசியல் புரோக்கர் ஆக மாறி, அரசு அதிகாரிகளில் ஆரம்பித்து அமைச்சர்கள்வரை கச்சிதமாக காரியங்களை செய்ய வைத்து காசு பார்த்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இவ்வாறு சம்பாதித்த பணத்தை எல்லாம் ஒரு தொண்டு நிறுவனத்தை போல் தனி ஆளாக நின்று, ஏழை எளிய மக்களுக்கு செலவு செய்து வருகிறார்.
அரசியல் சாணக்கியராக நின்று காய்களை நகர்த்தும் செல்வாக்கு மிக்க பெரும் செல்வந்தரான சுனில் கிருபளானி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.
அவர் அந்தப் பதவிக்கு வராமல் தடுப்பதுடன், ஊழல் அரசியலை ஒழித்துக் கட்ட விஜய் ஆண்டனி என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் சக்தி திருமகன் படத்தின் கதை.
அரசு எந்திரத்தை ஆட்டம் காண வைக்கும் ஆழமான வேடத்தில் இயல்பாக நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த செல் முருகன் விஜய் ஆண்டனிக்கு பக...
